28.2 C
Chennai
Monday, Dec 23, 2024
625.500.560.350.160.300.053.800 19
மருத்துவ குறிப்பு

சிறுநீர கட்டுப்படுத்த முடியலையா? அப்ப இத படியுங்க…

அத்திப்பழம், அத்திக்காய், அத்திப்பிஞ்சு வரிசையில் அத்திப்பட்டையும் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது.

அத்தி ஆலம் போல் உயர்ந்து பரவலாக வளரக்கூடும். அத்திமரத்திலுல் விழுதுகள் விடும். எனினும் நீண்டு வளராது. சித்த மருத்துவத்தில் அத்திமரத்தின் பட்டை, அத்திப்பால் அனைத்துமே பயன்படுத்தப்படுகிறது.

அத்திப்பழத்தின் பலன்களை இப்போது பலரும் உணர்ந்து அதிகம் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். அத்தி மரப்பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.

இதை அப்படியே வாங்கி பொடி செய்து வைத்துகொள்ளலாம். அல்லது பொடியாக வாங்கியும் பயன்படுத்தலாம்.

 

 

 

 

  • சிலருக்கு சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும்.
  • சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு வரும் போதே சிறுநீர் வெளியேறிவிடும். இதைக்கட்டுக்குள் வைக்க அத்திமரப்பட்டை 20 கிராம் எடுத்து அம்மியில் வைத்து நசுக்க வேண்டும்.
  • இதை சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். இதை இறக்கி வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போதே அரைடம்ளர் குடிக்க வேண்டும்.
  • இதை காலையிலும் மாலையிலும் என ஐந்து நாள்கள் தொடர்ந்து குடித்துவந்தால் சிறுநீர் கட்டுப்பாடு இயற்கையாகவே கட்டுப்படும்.
  • குறிப்பாக இன்று இளம்பெண்கள் தான் இந்த சிறுநீர் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் இதை முயற்சி செய்யலாம். உபாதை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

Related posts

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!

nathan

முரணான உறவு: பெண்கள் என்ன செய்யலாம்?

nathan

“விரைவில் கர்ப்பமாக ஆசையா? அப்ப இப்படி முயற்சி செய்யுங்க.”

nathan

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தூக்கம் மிகவும் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

கர்ப்ப காலத்தில் தப்பித்தவறி கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரோக்கியமான பற்களைப் பெறுவதற்கான முக்கியமான டயட் டிப்ஸ்…தெரிஞ்சிக்கங்க…

nathan

உடலில் கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்!!

nathan

பெண்ணாக இருப்பதன் ஆனந்தங்களும் அவஸ்தைகளும்

nathan