28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ytuiy
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது.

தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால், தலை முடிக்கொட்டாது என்று சிலர் கூறுவார்கள்.

ஒரு சிலர் எண்ணெய் தேய்ப்பதால் தான் முடிக்கொட்டுகிறது என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் சொல்லப்போனால், எண்ணெய் வைக்கும் முறையை தான் மாற்ற வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை.

நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்களிலும் கல்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது. தலை உலர்ந்து பொடுகு உள்ளவர்களுக்கு எண்ணெய் தேய்த்தால் அரிப்பு குறையும்.
ytuiy
தலைக்கு அதிக அளவில் எண்ணெயை வைக்கக் கூடாது. இவ்வாறு எண்ணெய் வைத்தால், அது தலைமுடியின் வேர்களில் நிரம்பிவிடும். இப்படி செய்வதன் மூலம், முடிக்கு சீரான வளர்ச்சிக் கிடைக்காமல் முடி கொட்டிவிடும்.

எண்ணெய் தலைக்கு தேய்த்தால் ஒரு சிலர் ஒரு வாரத்திற்கும் மேல், தலைக்கு குளிக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் சளி பிடிக்கும் என்று கூறுவார்கள். ஆனால், அவ்வாறு தலைக்கு எண்ணெய் தேய்த்தால், 2 நாட்களுக்குள் குளித்துவிடவேண்டும். இல்லையென்றால், முடிக்கொட்டும் அபாயம் இருக்கிறது.

குளிப்பதற்கு 2 மணி நேரம் முன்பே தலையில் எண்ணெய்யை ஊறவைக்க வேண்டும். அப்போது தான் அது நன்றாக வேர்களில் ஊடுருவும். சிலர் தலை முடியில் உள்ள சிக்கல்களை எடுப்பதற்காகவே, எண்ணெய்யை வைத்து எடுப்பார்கள். ஆனால், இப்படி செய்தால் அது இன்னும் ஆபத்தாக முடியும். சிக்கல் எடுத்த பிறகு தான், முடியில் எண்ணெய்யை தடவ வேண்டும்.

Related posts

இரவு உறங்கச் செல்வதற்கு முன் தலை முழுவதும் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வது சிறந்த பலன்களை தரும்

nathan

உங்களுக்கு தெரியுமா வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தேய்ச்சா தலைமுடி நரைக்காதாம்!

nathan

இயற்கை முறைகளைக் கொண்டு இந்த இளநரையை மாற்றி விடலாம் முயன்று பாருங்கள்

sangika

கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்யும் வெங்காயத்தின் அற்புத பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள் தோழிகளே!

nathan

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் கூறும் தகவல்கள்

nathan

உங்களுக்காக டிப்ஸ்.! புரதம் நிறைந்த ஹேர் பேக் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க..

nathan

நரை முடி கருக்க tips

nathan

ஆரோக்கியமான முடிக்கான‌ டாப் குறிப்புகள் – அழகு குறிப்புகள்

nathan

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan