28.8 C
Chennai
Thursday, Jul 17, 2025
63c7d270 f411 4b8b a0bd 6c22b3631efe S secvpf
சைவம்

முளைகட்டிய பயிறு அகத்திக்கீரை சுண்டல்

தேவையான பொருட்கள்

:

முளைகட்டிய பச்சை பயிறு – 1 கப்

அகத்திக்கீரை – 1 கட்டு

தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவைக்கு

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தாளிக்க

செய்முறை

:

• அகத்திக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• அடுப்பில் கடாயை வைத்து முளைகட்டிய பச்சை பயிறை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பாகம்

வெந்தவுடன் கீரையை சேர்த்து வேக வைக்கவும். தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

• மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து

வேகவைத்துள்ள கீரை, பருப்பை போடவும். அடுத்து அதில் துருவிய தேங்காயை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

• சத்தான சுவையான முளைகட்டிய பயிறு அகத்திக்கீரை சுண்டல் ரெடி.

63c7d270 f411 4b8b a0bd 6c22b3631efe S secvpf

Related posts

கட்டி காளான்

nathan

மஷ்ரூம் ராஜ்மா குருமா

nathan

கசப்பில்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி

nathan

கீரையை எப்படிப் பார்த்து வாங்குவது?

nathan

கத்தரிக்காய் குழம்பு

nathan

சம்பா கோதுமை புலாவ்

nathan

ஓமம் குழம்பு

nathan

சப்பாத்தி லட்டு

nathan

சுவையான சிவப்பு முள்ளங்கி மசாலா

nathan