19 1482138104 weight 21 1500610303
உடல் பயிற்சி

பெண்கள் ஒரே மாதத்தில் அதிகளவு எடையை குறைக்கும் உணவு முறைகள்

பெண்கள் தங்களின் சிறந்த நண்பர்களாக வைட்டமின் ‘இ’ யும், செலினியம் உப்பும் உள்ள உணவு வகைகளைத் தேர்வு செய்து சேர்த்து வந்தால் மருத்துவச் செலவின்றி ஆரோக்கியமாக இளமைத் துடிப்புடன் வாழலாம். பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, இந்த ஏழு உணவுகளும் பெண்களின் மிகச்சிறந்த சூப்பர் இளமை காக்கும் உணவுகளாகும். உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் சக்தியுடன் வாழவும் இந்த உணவுத் திட்டம் உதவும். இதன் மூலம் 1000 முதல் 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமைத் துடிப்புடன் வாழலாம்.

* காலை உணவு :

சிவப்பு காலையில் ஒரு கப் ஆரஞ்சு அல்லது தக்காளிச்சாறு. இத்துடன் மூன்று ரொட்டித் துண்டுகள் ஒரு கப் தயிர். (அல்லது) வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், பீச், பிளம்ஸ், அன்னாசித் துண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன்று, ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிடலாம். அன்னாசிப் பழம் என்றால் ஒரு கிளாஸ் சாறு, இத்துடன் வறுத்த ரொட்டித் துண்டு ஒன்று. காலையில் சாப்பிடப்படும் ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள பழங்கள், முன்தினம் இரவில் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் இந்தக் காலைப் பலகாரம் அதை நீக்கும். மலச்சிக்கல் இருந்தால் தக்காளிச் சாறு (இது சிகப்பு நிறம்) அருந்தவும். குடலை அபாரமாகச் சுத்தப்படுத்திவிடும் சிவப்பான பழங்கள், காய்கறிகள், இதற்கு சிவப்பு உணவு என்று பெயர்.

* மதிய உணவு

பச்சை மதியம் பச்சை நிறமுள்ள கீரைகள், காய்கறிகள், பச்சை நிறத் திராட்சை முதலியவைகளில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற மினரல்கள் உள்ளன. இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாது உப்புக்கள் பலப்படுத்துகின்றன. இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. எனவே மதிய உணவில் ஒரு சப்பாத்தியுடன் லெட்டூஸ், வெங்காயம், மிளகாய், சீஸ், வெள்ளரிக்காய், முதலியவற்றை காய்கறி சாலட்டாக ஒரு கிண்ணம் சாப்பிடவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சாப்பிடவும். 50 கிராம் ஏதாவது ஒரு கீரையை அவியலாகச் சாப்பிடவும் அல்லது காய்கறி சூப்புடன் ஒரு ஸ்லைஸ் ரொட்டித் துண்டு + பச்சை நிற திராட்சை. காய்கறி சூப்பில் லெட்டூஸ், முட்டைக்கோஸ், பசலைக்கீரை, பச்சை ஆப்பிள் முதலியன சேர்ந்திருக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் தனியாக சாப்பிடவும்.

* இரவு நீல உணவு :

நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச் சத்துக்கள் உணர்ச்சிகளை மெல்ல அமைதிப்படுத்தி தூங்க வைக்கும். அன்றைய தினம் எப்படியிருந்தாலும் பின்பற்றத் தக்க குறிக்கோளிலிருந்து விலகி விடாமல் தடுத்து தன்னம்பிக்கையுடன் தூங்க வைக்கும். எனவே, இரவு உணவில் நீலம், ஊதா, தங்க நிறம், வெள்ளை ஆகியவற்றில் உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேருங்கள். ஒரு கிண்ணம் சாதம், ஒரு கிண்ணம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி என்று சாப்பிடலாம்.

(அல்லது) பீட்ரூட் சாறு ஒரு கிளாஸ், ஒரு கிண்ணம் தயிர் சாதம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி, கத்தரிக்காய் அவியல் அரை கிண்ணம் என்று சாப்பிடலாம். பெண்கள் மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் 5 பவுண்டு வீதம் குறைந்து அழகாக மாறிவிடுவீர்கள். முதல் ஒரு மாதத்திலேயே இளமையான தோற்றம் கிடைக்கும்.

அதிகம் உண்ண விரும்புவது, மருந்து மாத்திரைகள் குறிப்பிட்ட நோய்களுக்காக சாப்பிடுவதும் குறைந்தும் போய் விடும். இதனால் சுறுசுறுப்பையும் சக்தியுள்ளதையும் உணர்ந்து உற்சாகமாக வாழ்வீர்கள். எனவே, குண்டான பெண்கள் இந்த உணவு முறையை இன்றே தொடங்குங்கள், ஒரே மாதத்தில் கண்டிப்பாக பத்து கிலோ எடை குறைவது உறுதி. இதனால் ஆரோக்கியமும் உறுதிப்படுத்தப்படுகிறது.

Related posts

தோள்பட்டையை அழகாக்கும் டிபி ஃப்ளை பயிற்சி

nathan

தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

சிக்கென்ற இடை தரும் சில யோகாசனங்கள்(beauty tips in tamil)

nathan

சர்வாங்காசனம்

nathan

இடுப்பு சதையை குறைக்கும் ட்விஸ்டர் க்ரஞ்சஸ் பயிற்சி

nathan

கை, கால்களின் மூட்டு பிரச்சனையை குணமாக்கும் பர்வதாசனம்

nathan

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் மெல்லோட்டம்

nathan

உயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள்

nathan

அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கட்டாயம் இதை படியுங்கள்….

sangika