25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1410579512yarlminnal.com 8
தொப்பை குறைய

தொப்பையை கரைக்கும் அன்னாசி

அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. விட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்துக்களைக் கொண்ட அன்னாச்சிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து. நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு, சிறு துண்டுகளாக செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு, தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன், ஒரு டம்ளர் பாலில், ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்க செல்லும் போது, ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.1410579512yarlminnal.com%20(8)

இரவில் அதை அப்படியே வைத்திருந்து, மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.
அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம். புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு, உடலில் வீக்கம் எதிர்ப்படாது.

Related posts

தொப்பை ஓவரா இருக்கா? குறைக்க வழி இருக்கு!

nathan

இரண்டே மாதத்தில் தொப்பையை குறைக்கலாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த ஜூஸை தினமும் 2 கப் குடிச்சா, சீக்கிரம் தட்டையான வயிற்றைப் பெறலாம்!

nathan

எளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்!

nathan

குனிய முடியாத அளவில் தொப்பை இருக்கா? அதைக் குறைக்க இதோ சில வழிகள்!!!

nathan

எடையை குறைக்கும் உடற் பயிற்சிகள்

nathan

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்!

nathan

ஏன் அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது கடினமாக உள்ளதென தெரியுமா?

nathan

விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா!

nathan