25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
2 cover image
மருத்துவ குறிப்பு

உள் தொண்டையில் அழற்சி ஏற்பட்டுள்ளதா? ஒரே நாளில் சரிசெய்யும் சில எளிய வழிகள்!

அடிநா சதை என்பது தொண்டையின் பின்புறத்தில் அமைந்துள்ள நீள்வட்ட வடிவிலான திசு அமைப்பாகும். இந்த திசுக்கள் தொண்டையின் வழியே உடலினுள் நுழையும் கிருமிகள் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் துகள்களை வடிகட்டி, உடலை தீவிரமான நோய்த்தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் முக்கிய பணியைச் செய்கிறது. அடிநா சதைகள் வாயின் வழியே உடலினுள் நுழையும் கிருமிகளை அழிக்கும் ஆன்டி-பாடிகளையும் உற்பத்தி செய்யக்கூடியது.

இருப்பினும் ஒருவரது வாயின் வழியே அளவுக்கு அதிகமான அளவில் கிருமிகள் நுழையும் போது, அடிநா சதைகள் அதிக வேலைப்பளுவிற்கு உட்படுத்தப்பட்டு, அப்பகுதியில் கிருமிகளின் தாக்குதல்களால் அழற்சி ஏற்பட்டு, அடிநா சதை அழற்சி அல்லது தொண்டைப் புண்ணை உண்டுபண்ணுகிறது.

பலரும் அடிநா சதை அழற்சிக்கு கடைகளில் விற்கப்படும் ஆன்டி-பயாடிக் மருந்து மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துவர். இப்படிப்பட்ட மருந்துகள் பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. இம்மருந்துகளால் ஏராளமானோர் பக்க விளைவுகளை சந்திப்பார்கள். ஆனால் இந்த அடிநா சதை அழற்சிக்கு நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிதில் குணப்படுத்த முடியும்.

இக்கட்டுரையில் அடிநா சதை அழற்சிக்கான சில எளிய கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு, ஒருவேளை இந்நிலை வந்தால், இந்த வைத்தியங்களின் மூலம் தீர்வு காணுங்கள்.tonsillitis

காரணங்கள்

அடிநா சதை அழற்சி ஏற்படுவதற்கு ஸ்ட்ரெப்டோகோகஸ் பாக்டீரியா, அடினோ வைரஸ், இன்ப்ளூயன்ஸா வைரஸ்கள் அல்லது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் போன்றவைகள் தான் முக்கிய காரணம். இவைகள் வாயின் வழியே உடலினுள் நுழைய முயலும் போது, அதை எதிர்த்துப் போராடுவதன் விளைவாக அடிநா சதையில் அழற்சி ஏற்படுகிறது.

அறிகுறிகள்

ஒருவருக்கு அடிநா சதையில் அழற்சி ஏற்பட்டிருந்தால், தொண்டைப் பகுதி புண்ணாக இருக்கும், எதையும் விழுங்கவே முடியாது, கடுமையான வாய் துர்நாற்றம் இருக்கும், குரலின் வலிமை குறையும், காது வலியால் அவஸ்தைப்படக்கூடும்.

அடிநா சதை அழற்சி வலிமிக்க பிரச்சனையாக இருந்தாலும், மிகவும் தீவிரமானது அல்ல. என்ன எதையும் எளிதாக விழுங்க முடியாது அல்லது விழுங்கும் போது வலியை அனுபவிக்கக்கூடும். கீழே அடிநா சதை அழற்சிக்கான சில எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!

மிளகு மற்றும் மஞ்சள் தூள்

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் மிளகுத் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு டம்ளர் சூடான பாலில் இந்த இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* சுவைக்காக தேனை 1 டீஸ்பூன் கலந்து கொள்ளவும்.

* இந்த பானத்தை ஒருவர் இரவில் படுக்கும் முன் குடித்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் பின்பற்றி வந்தால் அடிநா சதை அழற்சி விரைவில் குணமாகும்.

வெந்தய விதைகள்

* ஒரு கையளவு வெந்தய விதைகளை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* பின் ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் ஊற வைத்த வெந்தய விதைகளைப் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.

* இந்த பானம் சற்று குளிர்ந்த பின், அதனைக் கொண்டு வாயைக் கொப்பளியுங்கள்.

* இப்படி தினமும் இரண்டு முறை என ஒரு வாரம் தொடர்ந்து இந்த பானத்தால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம், அடிநா அழற்சி சரியாகும்.

துளசி

* ஒரு கட்டு நற்பதமான துளசி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.

* பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு, தட்டு கொண்டு 5 நிமிடம் மூடி வையுங்கள்.

* அடுத்து அதனை வடிகட்டி, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள்.

* இப்படி ஒரு வாரம் தினமும் குடித்து வந்தால், அடிநா சதை அழற்சி குணமாகும்.

மிளகு, சுக்கு பொடி, உலர்ந்த துளசி இலைகள்

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் மிளகுத் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 டீஸ்பூன் சுக்கு பொடி அல்லது காய்ந்த இஞ்சி பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் 1 டீஸ்பூன் உலர்ந்த துளசி இலைகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* இந்த பேஸ்ட்டை சிறிது வாயில் போட்டு விழுங்குங்கள். அதே சமயம் சிறிதளவை தொண்டையில் தடவிக் கொள்ளுங்கள்.

பூண்டு மற்றும் தேன்

* 3-4 பல் பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதன் தோலை நீக்கிவிட்டு, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் 2 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த கலவையை சிறிது வாயில் ஊற்றி குடித்துவிட்டு, எஞ்சியதைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* இந்த முறையை தினமும் என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அடிநா சதை அழற்சி சரியாகும்.

மஞ்சள் மற்றும் தேன்

* ஒரு பௌலில் 4 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 4 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த இரண்டையும் நன்கு பேஸ்ட் செய்து, வாயில் சிறிது போட்டு மெதுவாக தொண்டை வழியே விழுங்குங்கள்.

* இப்படி தினமும் 3 முறை என ஒரு வாரம் பின்பற்றினால், அடிநா அழற்சி விரைவில் குணமாகிவிடும்.

எலுமிச்சை, மிளகு மற்றும் உப்பு

* நற்பதமான எலுமிச்சையை இரண்டாக துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.

* பின் அதனை சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் மிளகுத் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* இந்த பானத்தை மெதுவாக குடியுங்கள். இப்படி தினமும் குடித்து வர, சீக்கிரம் தொண்டை பிரச்சனை விலகும்.

கடுகு விதைகள்

* ஒரு கையளவு கடுகு விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் கடுகு பொடி சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

* இந்த நீரால் வாயை சில நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும்.

* இப்படி தினமும் 2-3 முறை என 3-4 நாட்கள் செய்து வர, அடிநா சதை அழற்சி குணமாகும்.

அத்திப்பழம்

* நன்கு கனிந்த 4-5 அத்திப்பழத்தை எடுத்து நீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

* பின் ஒரு பாத்திரத்தில் 50 மிலி நீர் ஊற்றி, அதில் அத்திப்பழத்தை தட்டிப் போட்டு, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதனை அரைத்து, தொண்டையில் பத்துப்போட வேண்டும்.

* இப்படி 2-3 நாட்கள் தொடர்ந்து செய்து வர, தொண்டை பிரச்சனை நீங்கிவிடும்.

சீமைச்சாமந்தி டீ

* ஒரு 2 டீஸ்பூன் உலர்ந்த சீமைச்சாமந்தி பூவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வைத்து, அதில் சீமைச்சாமந்தி பூவைப் போட்டு 3-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

* பின்பு அதனை வடிகட்டி, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

* இந்த டீயை தினமும் 2-3 முறை என ஒரு வாரம் முதல் 10 நாட்கள் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

உப்பு மற்றும் நீர்

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த கலவையால் தினமும் பலமுறை வாயைக் கொப்பளித்து வந்தால், அடிநா சதை அழற்சில் இருந்து உடனடி நிவாரணம் கிடைப்பதைக் காணலாம்.

வேப்பிலை

* ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரில் ஊற்றி, அதில் 1 சிட்டிகை வேப்பிலைப் பொடி, 1 சிட்டிகை மஞ்சள் பொடி, சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

* பின் இந்த பானத்தை குளிர வைத்து, வெதுவெதுப்பான நிலையில் வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும்.

* இப்படி தினமும் குறைந்தது 3-4 முறை செய்து வந்தால், அடிநா சதை அழற்சியில் இருந்து விரைவில் விடுபடலாம்.

Related posts

மகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டியவை

nathan

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரத்த சோகை

nathan

தெரிஞ்சிக்கங்க… மெட்ராஸ் ஐ தாக்கத்தில் இருந்து விரைவில் விடுபட சில வீட்டு வைத்தியங்கள்!!!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாய் திகழும் பின் விளைவுகள் இல்லாத வலி நிவாரணி!சூப்பர் டிப்ஸ்

nathan

அலர்ஜியை சமாளிப்பது எப்படி?

nathan

தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க… ஓயாத விக்கலா இதோ சித்த மருத்துவத்தில் உடனடி தீர்வு

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த வேலை செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வரும் வாய்ப்புள்ளது எனத் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

nathan