தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் அல்லது செல்போன்கள் வைத்திருக்காத மனிதர்களை கண்டுபிடிப்பது கடினமான விடயம்.
அந்த அளவுக்கு போன்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டன.
ஆனால், இவற்றை வைக்கவே கூடாத ஆபத்தான இடங்களும் உள்ளது, அது குறித்து காண்போம்.
பின் பாக்கெட்
ஸ்மார்ட்போனை, உங்கள் பேண்ட்டின் பின்புற பாக்கெட்டில் வைப்பது என்பது இப்பொழுது ஸ்டைலாகிவிட்டது.போனை பின்புறத்தில் வைப்பதினால் அதிகப்படியான எமெர்ஜெண்சி அழைப்புகளை அழைக்கவும் வாய்ப்புள்ளது.
பயனருக்கே தெரியாமல் அவசர உதவி எண்ணை அழைத்தவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உங்கள் வயிறு மற்றும் கால்களில் நீங்கள் அடிக்கடி வலியை உணர்கிறீர்களா? அப்படியானால் அதற்கு உங்களுடைய இந்த பழக்கம் தான் காரணம்.
முன் பாக்கெட்
ஆண்கள் வெளியில் செல்லும் போது கைப்பையை எடுத்துச் செல்வதில்லை, எனவே அவர்கள் போனை முன் பாக்கெட்டில் வைப்பது தான் மிகவும் வசதியானது. ஆனால் இதன் காரணமாக ஆண்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும். ஸ்மார்ட்போனிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சு உயிரணுக்களின் தரம் மற்றும் அளவை மோசமாகப் பாதிக்கிறது
குளிர் இடங்கள்
வெளியில் குளிர்ச்சியாகவும், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் குறைவாகவும் இருந்தால், உங்கள் போனை கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்ளுங்கள். காரில் நீண்ட நேரம் அதை விட்டுவிடாதீர்கள். வெப்பநிலை வேறுபாடு கேஜெட்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
குளிர் இடத்திலிருந்து மீண்டும் ஒரு சூடான இடத்திற்கு உங்கள் போன் வரும்போது, நீர்த்துளிகள் உருவாக வாய்ப்புள்ளது. இது சிக்கலை உருவாக்கும்.
சூடான இடங்கள்
குளிர் இடங்களை போல, அதிக சூடான வெப்பநிலை இடங்களும் உங்கள் போனிற்கு தீங்கு விளைவிக்கும். வெப்பமான காலநிலையில், உங்கள் ஸ்மார்ட்போனை காரிலோ அல்லது கடற்கரையிலோ விட்டுவிடாதீர்கள். குறிப்பாக வீட்டில் சமையல் செய்யும் பெண்கள் போனை அடுப்புக்கு அருகில் மறந்து வைத்துவிடாமல் இருப்பது நல்லது.
தலையணை
தலையணைக்கு அடியில் உங்கள் போனை வைக்க வேண்டாம். இதற்குப் பல காரணங்கள் உள்ளது, இரவில், நோட்டிபிகேஷன் வந்தால் அது உங்களின் உடலில் உள்ள மெலடோனின் உற்பத்தியைப் பாதிக்கிறது. இது உங்களுக்குத் தேவைப்படும் உறக்கத்தைக் கெடுக்கிறது.