22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.3 1
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…பல் சொத்தைக்கும் பல் வலிக்கும் ஒரே எண்ணெய்யில் தீர்வு..

பல்வலி வந்தவுடன் வலி நிவாரணி மாத்திரைகளை நாடுபவர்கள் நம்மில் பலர். ஆனால் அதிகமாக பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகளால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பிரச்சனைகளை தடுப்பதற்கு நாம் தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகளிலும் பற்களை நன்றாக துலக்க வேண்டும்.பல்வலியை உடனடியாக குணமாக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வைப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கிராம்பு , தேங்காய் எண்ணெய் , உப்பு , மிளகு , தண்ணீர்

செய்முறை

முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து தூள் செய்துக் கொள்ள வேண்டும்.பின் ஒரு கிண்ணத்தில் கிராம்பு தூள், தேங்காய் எண்ணெய், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.

ஒரு டூத்ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும் பாதிக்கப்பட்ட இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி சிறிது நேரம் கழித்து நீக்க வேண்டும். இதனால் பற்களில் ஏற்படும் வலி குறைவதுடன், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

பல்வலியை போக்கும் வேறு வழிகள்

வீக்கத்துடன் பல்வலி ஏற்பட்டால் ஐஸ் கட்டியை பருத்தி துணியில் சுற்றி வலி உள்ள இடத்தில் வைத்தால் வீக்கம் குறைவதோடு பல் வலியும் குறையும்.தினமும் காலையில் நித்திரையிலிருந்து எழுந்தவுடன் நல்லெண்ணையை வாயிலெடுத்து கொப்பளித்து துப்பிவிடவேண்டும்.

அவ்வாறு செய்து வருவதன் மூலம் வாயில் ஏற்படும் பிரச்சினைகள் வராது தவிர்த்துக்கொள்ள முடியும்.இஞ்சிச் சாற்றை லேசாக சூடுபடுத்தி வாயிலிட்டு கொப்பளித்துவர பல்வலி குறையும்.இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால் பல் வலி குறைந்துவிடும்.

வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாற்றை வாயில் சில நிமிடங்கள் வைத்திருந்து பின் நீக்கிவிட வேண்டும்.பச்சையாக வெங்காயத்தை மென்று சாற்றை விழுங்க பல்வலி குறையும்.

அத்தோடு அவ்வாறு வெங்காயத்தினை மென்று சாற்றினை விழுங்குவதன் மூலம் வெங்காயத்தின் காரத்தன்மை பல்லிலுள்ள கிருமிகளை அழிக்கும்.ஒரு கிளாஸ் சூடான தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும்.

Related posts

இரவு தூங்குவதற்கு முன்பு அனைவரும் செய்ய வேண்டிய ஸ்மார்டான விஷயங்கள்!!!

nathan

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது ஐரோப்பிய பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

nathan

உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றுவது எப்படி?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைத் தாக்கும் டைப்-1 சர்க்கரைநோய்

nathan

கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா பைல்ஸ் வருவதற்கு இவைகள் தான் காரணம் என்பது தெரியுமா?

nathan

ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வரும் !தெரிந்துகொள்வோமா?

nathan

டயாலிசிஸ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

இல்லறம் சிறக்க தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள்

nathan