26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
10 142089049
அழகு குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்குள் நுழைய போவது உங்கள் திருமணத்தின் போது தான். வாழ்க்கையின் மிகுந்த அழகான தருணமாக இது அமையும். நம் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நடக்கும் இந்த திருமணத்தில் சின்ன சின்ன விஷயம் முதற்கொண்டு நாம் பார்த்து பார்த்து கவனமாக செய்வோம். திருமண வைபவத்தின் போது நடக்கும் அனைத்து சடங்குகளுக்கு மிகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் திட்டமிடுவோம். திருமணம் மட்டுமல்லாது அதற்கு முன் நடக்கும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திடவும் காலில் பம்பரம் கட்டிக் கொண்டு சுழல்வோம்.

ஆனால் பல பெண்கள் மெஹந்தி (மருதாணி) வைக்கும் சடங்கின் போது அவர்களின் ஆடைகளுக்கும் தோற்றத்திற்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். அதற்கு காரணம் இந்த நிகழ்வு அவர்களின் வீட்டில் நடப்பதால் மிகப்பெரிய நிகழ்ச்சியாக இது இருக்காது. இருப்பினும், மெஹந்தி சடங்கு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, அது உங்கள் வீட்டில் நெருங்கிய சொந்த பந்தங்களை மட்டும் அழைத்து நடத்தப்பட்டாலும் சரி, அது உங்களுக்கான விசேஷமான நாளாகும். அந்த தருணங்கள் அனைத்தும் புகைப்படங்களாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். அனைவரின் கண்களுக்கும் நீங்களே தெரிவீர்கள். அதனால் ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் பார்ப்பதற்கு சிறப்பாக தோன்ற வேண்டும்.

அதனால் மெஹந்தி சடங்கின் போது அனைவரும் உங்களை பார்த்து அசந்து போகும் வகையில் ஸ்டைலாக இருப்பது எப்படி என நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம்.

பளிச்சென இருக்கும் நிறங்களை தேர்ந்தெடுங்கள்

நீங்கள் பாலிவுட் சினிமாக்களின் பரம விசிறியா? அப்படியானால் பின்பற்றுவதற்கு ஏராளமான பாலிவுட் கதாநாயகிகள் உள்ளார்களே. சினிமாவோ அல்லது உண்மையோ, நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு பல விதமான ஸ்டைல்கள் கொட்டிக் கிடக்கிறது. ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படத்தில் பிரபலமான கஜோலின் பச்சை நிற ஆடை, சுபைதா படத்தில் பிரபலமான கரிஷ்மா கபூரின் வெண்ணிற ஆடை அல்லது நிஜ வாழ்க்கையில் திருமணத்தின் போது ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், ஈஷா அல்லது அஹானா தியோல் அணிந்த ஆடை என பல உதாரணங்கள் கொட்டிக் கிடக்கிறது.

சிறப்பான நிறங்கள்

நாகரீகத்தின் அடிப்படையில் போக வேண்டுமானால் ஆரஞ்சு, மஞ்சள், பச்சை அல்லது இந்த நிறங்களின் கலவையே சிறந்த தேர்வாக இருக்கும். பளிச்சென இருக்கும் இந்த நிறங்கள் கண்டிப்பாக உங்களை தனியாக எடுத்துக் காட்டும்.

பளிச்சென இருக்கும் நிறங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வெளிரிய பழுப்பு, மிதமான பிங்க், மிதமான மஞ்சள் அல்லது நீலப் பச்சை நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். ஒருவருக்கொருவர் உங்கள் ஆடை நிறத்தை பார்த்து பாராட்டி கொள்ளும் அளவிற்கு நிறத்தை தேர்ந்தெடுங்கள். சொல்லப்போனால் கரை அல்லது துப்பட்டா அல்லது ஒட்டு மொத்த தோற்றத்தில் நிறங்களின் சேர்க்கை நன்றாக இருக்க வேண்டும்.

ஆடையை கவனமாக தேர்ந்தெடுங்கள்

ஆடையை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டிய உங்களின் வசதியை பற்றி தான். ஆனால் அதற்காக ஸ்டைலை மறந்து விடக்கூடாது. அனார்கலி அல்லது சல்வார் கமீஸ் அல்லது குர்தா தான் சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் மரபு சார்ந்த வழியில் ஆடை அணிய வேண்டும் என விருப்பப்பட்டால் சேலை, லெஹெங்கா அல்லது காக்ராவிற்கு மாற்றாக இவைகளை அணியலாம். முடிந்த வரையில் அவைகளில் எம்பிராய்டரி போட்டுக் கொள்ளலாம். ஆனால் அவை கழுத்து வரை மட்டுமே இருக்க வேண்டும். இதனால் மெஹந்தி கரையால் அவை பாதிக்கப்படும் என்ற அச்சம் வேண்டாம்.

இருப்பினும், உங்களுக்கு நாகரீகமான தோற்றம் வேண்டுமானால் வசதியான ஷார்ட்ஸ், முட்டி நீளத்திற்கு இருக்கும் பேன்ட்கள் அல்லது முட்டி நீளத்திற்கு இருக்கும் சட்டைகளை அணியலாம். இதனோடு எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்து கொள்ளலாம். கண்டிப்பாக அன்றைய நாளில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப்போவது நீங்களாகத் தான் இருப்பீர்கள். மேற்கூறியபடி உங்களை கற்பனை செய்து பாருங்கள், அப்போது புரியும்.

நகைகளின் மீது சமரசம் செய்யாதீர்கள்

சடங்கு வீட்டில் நடந்தாலும் சரி அல்லது வேறு இடத்தில் நடந்தாலும் சரி, நீங்கள் அணியும் நகைகளோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான நகைகளை தேர்ந்தெடுக்கவும். அது முக்கிய முக்கியமாகும்.

உங்களுக்கு தைரியம் இருந்தால், கனமான குந்தன் அல்லது பன்ன நிற கற்களை கொண்ட நகைகளையும் அணியலாம். உங்கள் தாயின் கனமான தங்க நகைகளை அணிய ஆசைப்பட்டால், பயம் கொள்ளாமல் அதை செய்யுங்கள். பார்த்தவுடன் பளிச்சென தெரிய வேண்டுமானால், ஈர்க்கும் வகையில் இருக்கும் நகைகளை அணியுங்கள். மணப்பெண் தோற்றம் இல்லாமல் மிகவும் அடக்கமாக இருந்தால், ஆண்டிக் நகைகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஃப்ளோரல் வகை நகைகளை கூட நீங்கள் முயற்சிக்கலாம்.

மேக்-அப் முக்கியம்

மேக்-அப்பை தேர்ந்தெடுக்கும் போது, நீண்ட நேரம் நீங்கள் அமர்ந்திருக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கு காரணம் மெஹந்தி போட்டு விடுபவர்கள் உங்கள் கைகள் மற்றும் கால்களுக்கு நீண்ட நேரம் மருதாணி போட்டு விடுவதால், நீண்ட நேரத்திற்கு நீங்கள் சும்மா உட்கார வேண்டியிருக்கும். அவைகள் முடிந்த பின்னாலும் கூட மருதாணி காயும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். அதனால் அது வரை உங்கள் மேக்-அப்பை நீங்கள் கலைக்க முடியாது.

வாட்டர் புரூப் மற்றும் நீண்ட நேரம் நிலைத்திடும் மேக்-கப் தான் இந்த தருணத்திற்கு ஏற்றவையாக இருக்கும். இது போக, நீங்கள் அணியும் ஆடைகளுடன் மேக்-கப் நிறங்கள் ஒத்துப்போகுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எத்தனை நிறங்களை வைத்து வேண்டுமானாலும் விளையாடுங்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக மேக்-கப் ஏறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஹேர் ஸ்டைல்

கூந்தல் என வரும் போது, அழகாக அள்ளி முடிந்து கொள்ளுங்கள். நீண்ட நேரம் உட்கார வேண்டி வருவதால் அது தான் தோதாக இருக்கும். நீங்கள் விருப்பப்பட்டால், கூந்தலை அவிழ்த்தும் விடுங்கள். ஆனால் அப்படி செய்தால் முன் பக்க முடியை சேர்த்து பின் குத்திக் கொள்ளுங்கள். இதனால் அது உங்கள் முகத்தில் விழுந்து தொந்தரவு செய்யாது.

திருமணத்தைப் பற்றிய உங்கள் சந்தோஷம் மற்றும் குதூகலத்தை உங்கள் மெஹந்தி சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே புட்டு புட்டு வைக்கும். அதனால் இந்த எளிய டிப்ஸ்களைப் பின்பற்றி ஒரு தேவதையாக மாறிடுங்கள்.

Related posts

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும்……

sangika

முயன்று பாருங்கள்…பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடி

nathan

அடேங்கப்பா! மூன்று ஆண்டுகளுக்கு பிறகுபிரபல சீரியல் நடிகைக்கு குழந்தை!

nathan

சுவையான கொண்டைக்கடலை கட்லெட்

nathan

குழந்தையுடன் செளந்தர்யா ரஜினிகாந்த் -புகைப்படம்

nathan

வெளியே விளையாட சென்ற 2 வயது மகன்! தந்தை கண்ட பயங்கரம்!

nathan

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan

அறுபதிலும் அழகு தரும் அன்னாசி பழம்

nathan