29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800.900 14
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! இரைப்பை குடல் பாதையில் ஏற்படும் பிரச்சினைகளால் தொந்தரவா?

வயிற்று வீக்கம் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

இது பெரும்பாலான நேரங்களில் மிகவும் வேதனையாகவும், சங்கடமாகவும் இருக்கும். இரைப்பை குடல் பாதையில் அதிகப்படியான வாயு நிரப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது.

வாயுவை வெளியேற்ற முடியாவிட்டால் வயிறு வீக்கம் உண்டாகி வலி ஏற்படும். இது ஐபிஎஸ் (Irritated bowel syndrome)அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி என அழைக்கப்படுகிறது.

இது வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற சங்கடமான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து பாஸ்ட் புட் போன்ற உணவுகளின் விளைவே இந்த நோய்க்கு முக்கிய காரணமாகிறது.

அதுமட்டுமின்றி பக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகளை உட்கொள்வதும் இந்த நோய்க்கு காரணமாக கருதப்படுகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் சில இயற்கை வழிகளை தெரிந்து வைத்து கொள்வது அவசியமாகும். அந்தவகையில் தற்போது அந்த இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

 

  • வெதுவெதுப்பான நீரில் ஒரு சில துளிகள் சேர்த்து உணவுக்கு பிறகு குடிக்கலாம். இயற்கையில் இரைப்பை குடல் வலி நீக்கியாக மிளகுக்கீரை எண்ணெய் இருப்பதால், உடலில் வாயு தொல்லையைக் குணப்படுத்த உதவும். மேலும் செரிமானத்தை தூண்டி வாயுவை விடுவிக்கிறது. இதனால் வயிறு வீக்கம் மற்றும் குடல் பிடிப்பு சீராகிறது.

 

  • இரண்டு ஸ்பூன் இஞ்சி எண்ணெய்யை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து அருந்தலாம். இது வயிற்று தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் குடலில் உள்ள வலியை குறைக்க உதவுகிறது.

 

  • கற்பூரவள்ளி இலை எண்ணெய், வாயு பிரச்சனையை உடனடியாக சரி செய்யும் அம்சத்தையும் கொண்டுள்ளது. செரிமானத்தை எளிதாக்கும் மற்றும் வயிற்றுப் பிடிப்பை அழிக்கும் இந்த எண்ணெய், குடலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.

 

  • பெருஞ்சீரக எண்ணெய்யை தண்ணீரில் ஒரு சில சொட்டுகள் கலந்து அந்த தண்ணீரைப் பருகவும். இந்த பெருஞ்சீரகம் தண்ணீரை தவறாமல் உட்கொள்வது வலியை எளிதாக்குகிறது மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி தொடர்பான அறிகுறிகளை தடுக்கிறது.

 

  • சோம்பு எண்ணெய் ஆண்டிஸ்பாஸ்மோடி பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் குடல் கோளாறுகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. ஐபிஎஸ்-பவல் சிண்ட்ரோம் சிகிச்சையில் வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயு போன்ற அறிகுறைகளை சரி செய்ய இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

Related posts

தெரிந்துகொள்வோமா? கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் சந்திக்கும் உடல் நல பாதிப்புகள் என்னென்ன?

nathan

சுவையின்மைக்கான சித்த மருந்துகள்

nathan

பெண்களின் மாறி வரும் ரசனைகள்

nathan

பாரம்பரிய பாட்டி வைத்தியம் அளிக்கும் வீட்டு தீர்வுகள்

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம்

nathan

பெண்களே கர்ப்பகாலத்தை இனிமையாக கழிக்க இதை மறக்காதீங்க…

nathan

உங்களுக்கு சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது உடலில் கூச்ச உணர்வு உண்டாவது ஏன்?

nathan

முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

கணவன் – மனைவி இடையே அன்பே பிரதானம்

nathan