28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
respiratory
மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! மழைக்காலத்தில் ஏற்படும் சுவாச நோய்களைத் தடுக்க சில வழிகள்!!!

வெயில் கால புழுக்கத்திலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும், தண்ணீர் பற்றாக்குறை எப்போது நீங்கும், விவசாயத்திற்கு எப்போது நல்ல மழை கிடைக்கும் என்று பலரும் ஒவ்வொரு காரணத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காலம் மழைக்காலம். மழை பெய்தால் மண் செழிக்கும். இருப்பினும் மழைக்காலம் துவங்கும் போது குழந்தைகளும், பெரியவர்களும் சில பொதுவான நோய்களால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

பலத்த மழை வரும் போது, அதனுடன் சேர்ந்து அடிக்கடி சில நோய்களும் வந்துவிடுகின்றன. ஜலதோஷம், இருமல், காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் ஆகியவை மழைகாலத்தில் ஏற்படும் பொதுவான நோய்களாகும். ஆனால் மலேரியா, டெங்கு, தண்ணீர் மற்றும் உணவுத் தொற்றுவியாதிகள் போன்ற மழைக்காலங்களில் வரக்கூடிய நோய்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். இந்த பொதுவான நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

குடை அல்லது மழைக்கோட் அவசியம்

பொதுவான சுவாச நோய்களைத் தவிர்ப்பதற்கு, வெளியில் செல்லும் போது எபோதும் மழைக் காப்புப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். காலையில் சில வேளைகளில் மழைவராதது போல் வெயில் இருக்கலாம். ஆனாலும் குடை அல்லது மழைக்கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில் அந்த நாளில் எந்த நேரத்தில் மழை வந்தாலும் உங்களுக்கு இவை உதவியாக இருக்கும்.

வைட்டமின் சி உணவுகள்

பொதுவான சுவாச நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கு வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்கள எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஜலதோஷத்திற்கு மிகச்சிறந்த மருந்து வைட்டாமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படச் செய்து ஜலதோஷத்தைக் குணப்படுத்துகிறது.

அவசியம் குளிக்கவும்

நீங்கள் மழையில் நனைந்தால், அதற்குப் பின்னர் குளிக்க வேண்டும். இதனால் நோய்த்தொற்று பரவாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

சூடாக சாப்பிடுங்கள்

அடைமழையில் சிக்கி வீட்டிற்கு வந்து சேர்ந்தவுடன், சூப் அல்லது சூடான பால் போன்ற ஏதாவது சூடான பானம் அருந்துங்கள். உங்கள் உடல் வெப்பநிலை மாற்றத்தால், ஜலதோஷம் அல்லது நோய்த்தொற்று வராமல் தடுப்பதற்கு இது உதவும்.

கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

மழைக் காலத்தின் போது உங்கள் கைகளை கிருமிநீக்கி மூலம் சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை

உங்கள் உடல் வெப்பநிலையை சீராகப் பேணுவதற்கும், உங்கள் உடலில் இருந்து நச்சுத்தன்மைகளை நீக்குவதற்கும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

Related posts

ஆண்களின் ஆசையை அதிகரிப்பதில் பெண்களின் ஆடைக்கு முக்கிய பங்குண்டு

nathan

டயாலிசிஸ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

தெரிஞ்சிக்கங்க… ஓயாத விக்கலா இதோ சித்த மருத்துவத்தில் உடனடி தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

nathan

பெண்கள் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவிட என்ன காரணம்

nathan

வெறும் உப்பைக் கொண்டு ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி? இதை படிங்க…

nathan

உங்களுக்கு பல் கூச்சம் அதிகமாக இருக்கா?இதோ எளிய நிவாரணம்

nathan

முதல் வகை நீரிழிவு நோயால் இறப்பதற்கு ஆண்களை விட பெண்களுக்கு 40 சதவீத வாய்ப்பு அதிகம்: ஆய்வு முடிவு

nathan

நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற அற்புதமான எளிய தீர்வு

nathan