28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
24 ada323
சிற்றுண்டி வகைகள்

சுவையான அடை தோசை

அடை தோசை மிகவும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு. இந்த தோசையை பல்வேறு பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால், இதனை காலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதுடன், விரைவில் பசியெடுக்காமலும் இருக்கும்.

மேலும் இந்த ரெசிபியை எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமலும் அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். இப்போது அந்த ஆரோக்கியமான அடை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு…

புழுங்கல் அரிசி – 1 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)

பச்சரிசி – 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)

உளுத்தம் பருப்பு – 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)

துவரம் பருப்பு – 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)

பாசி பயறு – 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)

கொள்ளு – 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)

கடலைப் பருப்பு – 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)

வரமிளகாய் – 8

சோம்பு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பூண்டு – 10 பல்

இஞ்சி – 1 துண்டு

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – சிறிது

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

கசகசா – 1/2 டீஸ்பூன்

தேங்காய் – 1/2 மூடி (துருவியது)

எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கொடுக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பருப்புக்களை ஊற வைத்து நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.

அப்படி அரைக்கும் போது, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து மிகவும் மென்மையாக அரைக்காமல், ஓரளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் கொத்தமல்லி, கசகசா சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் பிரட்டி இறக்கி, அதனை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், அடை தோசை தயார்!!!

Related posts

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan

சோயா டிக்கி

nathan

கருணைக்கிழங்கு காரப் பணியாரம்!

nathan

வடகறி–சமையல் குறிப்புகள்!

nathan

எள் உருண்டை :

nathan

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

nathan

சர்க்கரை வள்ளி கிழங்கு புட்டு

nathan

ஆளி விதை இட்லிப் பொடி

nathan

நவதானிய கொழுக்கட்டை

nathan