26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
ashoka tree leaf
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் அசோக மரப்பட்டை

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் அசோக மரப்பட்டை.பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது அசோக மரம். அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் இரண்டையும் அரைத்து தூள் செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்து காலை – மாலை இருவேளை உண்டுவர வேண்டும்.

இதனால் கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி அசோக மரத்திற்கு உண்டு.

ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் உடல் சார்ந்த குறைபாடுகளினால் மாதவிலக்கு முறையாக வராமல் இருக்கும். இவர்கள் கால் கிலோ அசோகப்பட்டை, மாவிலங்கப்பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்து தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை – மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

100 கிராம் அசோகப்பட்டை தூளுடன் 25 கிராம் பெருங்காயத்துளை கலந்து வைத்து கொள்ளுங்கள். இதில் 2 கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும்.

அசோக மரத்தின் பட்டைகள் மற்றும் மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் குறையும். கருப்பை கோளாறுகளை சரிசெய்ய அசோக மரப்பட்டை, மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக காய வைத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் குறையும்.ashoka tree leaf

Related posts

அவசியம் படிக்க..உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்!

nathan

பித்தத்தை சமன்படுத்தும் நெல்லிக்காய்

nathan

பசியை தூண்டும் சீரகம்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத 12 விஷயங்கள்!!!

nathan

இந்த உணவுகள் உங்கள் சிறுநீரகத்தை பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்…!

nathan

உங்கள் கவனத்துக்கு கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!

nathan

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயது எது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இத உணவில் அதிகமா சேர்த்துக்கிட்டா மாரடைப்பு வர வாய்ப்பிருக்காம்!

nathan

பெண் கருவுறா மைக்கு தடையாக இருக்கும் எட்டு விஷயங்கள்?

nathan