24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.800 4
மருத்துவ குறிப்பு

உயிரையும் பறிக்கும் உருளைகிழங்கு… முளைவிட்ட உருளைக்கிழங்கு ஏற்படுத்தும் ஆபத்து ?

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு இரசாயனங்கள் உள்ளன. இது நமது உயிருக்கே உலை வைத்து விடுகின்றது.

நாம் அடிக்கடி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. இதில் கூட ஆபத்து உள்ளது என உணவியல் நிபுணர் கூறுகின்றனர்.

அதிலும் முளைவிட்ட உருளைக்கிழங்கு, பச்சை நிற திட்டுகள் உள்ள உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்து என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது உருளைக்கிழங்கால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று இங்கு பார்ப்போம்.

முளைவிட்ட உருளைக்கிழங்கு ஏற்படுத்தும் ஆபத்து ?

உருளைக்கிழங்கில் முளைவிட்டிருந்தாலோ, பச்சை நிறத்திட்டுகள் காணப்பட்டாலோ, அவற்றை உபயோகிக்கக்கூடாது.உருளைக்கிழங்குகளை நீண்டநாள் சேமித்து வைப்பதால் அவற்றில் முளைவிடுகின்றன. இது உருளைக்கிழங்கோடு ஒப்பிடும்போது இவை ருசியாகவோ, ஆரோக்கியமானதாகவோ இருப்பதில்லை.

முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் காணப்படும் சாக்கோனைன் (Chaconine) மற்றும் சாலனைன் (Solanine) ஆகியவை நச்சுப் பொருட்களைக் கொண்டுள்ளன. Solanine நச்சுப்பொருள் சிறிது இருந்தாலும் விஷமாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது.விலங்குகள், பூச்சிகள், பூஞ்சைக்கு எதிரான இயற்கை பூச்சிக்கொல்லிகளாக செயல்படும் இவை தாவரங்களுக்கு நன்மை தருபவை.

சாக்கோனைனைவிட, சாலனைன் அதிக நச்சுத்தன்மை உடையது. சிறிதளவு உடலில் கலந்தாலும் தீவிரமான பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியது. குடல் பாதையில் எரிச்சல் உண்டாக்கி பலவகை குடல் நோய்களுக்கு காரணமாகிறது.

இதோடு, முளைவிட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவுப்பொருள் (Starch) சர்க்கரையாக மாறிவிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கானது. உருளைக்கிழங்கின் இலை, தண்டு, கனிப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. கிழங்குப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

பச்சை நிறத் திட்டுகள் உள்ள உருளைக்கிழங்கு ஏற்படுத்தும் ஆபத்து?

 

  • பச்சை நிறத் திட்டுகள் உள்ள உருளைக்கிழங்குகளையும் மேல்தோல் சுருங்கி உள்ளவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
  • சூரிய ஒளிபடும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் பச்சைநிறத் திட்டுகள் உண்டாகின்றன.
  • கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) இருப்பதால், இதுவும் தீங்கானதே. இவற்றை உபயோகிக்காமல் அழித்துவிடுவதே சிறந்தது.
  • நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயரியா போன்றவை ஏற்படும்.முதலில் பலவீனமாக இருக்கும். கோமா நிலையை அடைந்து அரிதாக சிலருக்கு மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டு.

 

யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

முளைவிட்ட மற்றும் பச்சை நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை கருவுற்ற பெண்கள் உண்பதால் கருச் சிதைவு ஏற்படக் கூடும்.பிறக்கும் குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது.

உருளைக்கிழங்கை முளைவிடாமல் எப்படி பாதுகாக்கலாம்?

அனுமதிக்கப்பட்ட ரசாயனங்களான குளோரோபைடம் கார்பனேட் (Chlorophytum carbonate), ஹைட்ரஜன் பெராக்சைட் (Hydrogen peroxide) போன்ற ரசாயனங்களை செலுத்தியும் உருளைக்கிழங்கை முளைவிடுவதில் இருந்து பாதுகாக்கலாம்.வீட்டில் சேமித்து வைக்கும் போது கிராம்பு எண்ணெய், புதினா எண்ணெய் தடவி வைப்பதால் உருளைக்கிழங்கை முளைவிடாமல் பாதுகாக்கலாம்.

44 முதல் 50 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் ஈரப்பதம் இல்லாத காற்றோட்டமான இடத்தில் வைத்தே உருளைக்கிழங்குகளைச் சேமிக்க வேண்டும்.ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபிரிட்ஜில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், உருளைக்கிழங்கில் உள்ள மாவுப்பொருள் அதிக சர்க்கரையாக மாறிவிடும்.

Related posts

பெண்களின் முன்அழகை மேம்படுத்தும் தண்ணீர் விட்டான் கிழங்கு

nathan

எடையைக் குறைக்க கேரள ஆயுர்வேத வைத்தியம் கூறும் சில வழிகள்!

nathan

லவ்வர் வேணுமா. மருந்து சாப்பிடுங்க.

nathan

மரண வலையில் சுலபமாக விழும் மனிதர்கள்

nathan

புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும் தெரியுமா!

nathan

உங்க ஒழுக்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய இந்த பானங்களை சாப்பிட்டா போதுமாம்!பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…உயர் ரத்த அழுத்த ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உங்களால் உயிர் வாழ முடியும்!

nathan

மாமியாரிடம் மருமகள் எதிர்பார்க்கும் விஷயங்கள்

nathan