25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
potatobajji
சிற்றுண்டி வகைகள்

சுவையான உருளைக்கிழங்கு வடை

உருளைக்கிழங்கு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதை வித்தியாசமாக செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெசிபியை கொடுத்துள்ளது.

அதை படித்து பார்த்து, உங்கள் வீட்டிற்கு சென்றதும் செய்து சாப்பிட்டு, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, இப்போது உருளைக்கிழங்கை கொண்டு எப்படி வடை செய்வதென்று பார்ப்போமா!!!

Crispy Potato Vada Recipe
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து தோலுரித்தது)

கடலை மாவு – 1/2 கப்

அரிசி மாவு – 1 கப்

பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 துண்டு (பொடியாக நறுக்கியது)

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு கட்டியில்லாதவாறு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்து, கொத்தமல்லியை போட்டு, நன்கு பிசைய வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை ரெடி!!!

Related posts

சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை

nathan

ஜவ்வரிசி டிக்கியா

nathan

மொறுமொறுப்பான கத்திரிக்காய் பஜ்ஜி

nathan

நேத்துக் கொட்டுமா பச்சடி

nathan

கேழ்வரகு உளுந்து தோசை

nathan

ஆப்பம் செய்வது எப்படி?

nathan

இந்த பனீர் பாப்கார்னை செய்து பாருங்கள்.

nathan

சுவையான மசாலா பொரி

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

nathan