சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் நமக்குள் இருக்கவேண்டும் என்பதற்காக நமது சாஸ்திரம் ஒரு சில விதிமுறைகளை கூறுகிறது.
தெரியாமல் தவறு செய்தால் பரவாயில்லை. ஆனால் தெரிந்தே ஒருவர் தவறு செய்தால் அதன் விளைவு அதிகமாக இருக்கும்.
பழங்காலத்தில் மாதவிடாய் உள்ள பெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமை படுத்துவார்கள். அப்போது குடும்பம் என்றாலே கூட்டுக்குடும்பமாகத்தான் இருந்தது .
ஆனால் இந்த காலத்தில் இது சாத்தியமில்லை. நமது வேலையை நாம் செய்துகொள்ளவேண்டும் என்னும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
1 – மாதவிடாய் காலத்தில் பெண்கள் காகத்திற்கு தானம் அளிக்கலாம்.
2 – தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டு சமையல் அறைக்கு சென்று சமையல் வேலைகளை செய்யலாம்.
3 – மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோலம் போடலாம்.
காலத்திற்கு தகுந்தவாறு நாம் சாஸ்த்திரங்களில் சிறிது மாற்றம் செய்துகொள்வதில் தவறில்லை.