25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.800. 1
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…புத்தாண்டிலிருந்து நோயின்றி வாழ வேண்டுமா?

தற்போதுள்ள உணவுப்பழக்க வழக்கங்கள் அதிகமாக மக்களிடையே பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகின்றது என்பதை நாம் கண்கூடாக அவதானித்த வருகின்றோம்.

பிறந்திருக்கும் புத்தாண்டில் உணவு விடயங்களில் சில தீர்மானங்களை எடுத்து, அதனைப் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வினை தொடங்கலாமே… நாம் அன்றாடம் உணவுபழக்கவழக்கங்களில் என்னென்ன மாற்றத்தினை கொண்டு வர வேண்டும் என்பதை தற்போது காணலாம்.

சோடா

 

  • ஆரோக்கியமான உணவினை சாப்பிட்டுவிட்டு, செரிமானம் ஆவதற்கு சோடா குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • இவை பல்வேறு உடல் உபாதைகளை சந்திப்பதுடன், நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு, கருத்தரிப்பதில் பிரச்னை, கல்லீரல், கணையம், குடல் போன்ற உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேர்வது போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
  • சில தருணங்களில் இவை மரணத்தினையும் ஏற்படுத்தும்.

 

நடைபயிற்சி

 

  • வாரம் ஒன்றிற்கு 4 மணி நேரம் அல்லது நாள் ஒன்றிற்கு 35 நிமிடங்கள் கட்டாயம் நடக்க வேண்டுமாம்.
  • இதனால் பக்கவாதம், இதயநோய் பாதிப்பினை தடுக்கின்றது. நாம் நடக்கும் வேகத்தினைப் பொறுத்தே இதன் நன்மை கிடைக்கும். மெதுவாக நடந்ததால் 20%, வேகமாக நடந்தால் 24% கூடுதல் பலன் கிடைக்குமாம்.

 

சூர்ய வெளிச்சம்

 

  • பொதுவாக காலை, மாலை நேர சூர்ய வெளிச்சம் நமது உடலுக்கு மிகவும் நல்லது என்பதை தற்பேது மருத்துவர்கள் அதிகமாகவே கூறுகின்றனர்.
  • இவ்வாறு வெளிச்சம் படும்படி சென்றால், மனஅழுத்தம், பிரசவத்திற்கு பின்பு ஏற்படக்கூடிய மனச்சோர்வு இவற்றினை நீக்குவதோடு, கண்ணின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ள உதவும்.
  • குறிப்பாக குளிர்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்று.

 

மசாஜ் அவசியம்

 

  • மசாஜ் செய்வதன் மூலம் உடலுக்கும், மனதிற்கும் தேவையான மன அழுத்தத்தை குறைக்கின்றன.
  • மசாஜ் செய்வதன் மூலம் ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளில் இருந்து விடுபட உதவுவதாகவும், நிம்மதியான தூக்கத்தை பெற முடியுமாம்.

 

பசுமையான இடங்களுக்கு செல்லுதல்

 

  • பசுமையான இடங்கள் என்பது நீல இடம் மற்றும் பச்சை இடத்தை குறிக்கின்றன. நீல இடம் என்பது ஆறு, ஏரி, குளம் போன்ற நீரோட்டமான இடங்களையும். பச்சை இடம் என்பது வயல்வெளி, காடுகள், தோட்டங்கள் போன்ற இடங்களையும் கூற பயன்படுத்தப்படுகின்றன.
  • ஏரி, பூங்கா, காடுகள் போன்ற பகுதிகளுக்கு சென்று சிறிது நேரம் நடந்துவிட்டு வந்தால் ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • இயற்கை சூழலுக்கு அருகே நாம் இருப்பதன் மூலம், சுவாச கோளாறுகள் ஏற்படாமலும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைத்திடவும், மேம்பட்ட மனநலம், மனச்சோர்வில் இருந்து விடுதலை போன்ற எண்ணற்ற நன்மைகளை எளிதில் பெற்றிட முடியும்.

Related posts

குடற்புழுக்களை அடியோடு அழிக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’..!!தெரிந்துகொள்வோமா?

nathan

சிறுநீரக நோயில் இருந்து மீட்க உதவும் சிறப்பான 5 உணவுகள்!!!

nathan

கவலை வேண்டாம்… வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய வேண்டுமா?

nathan

பெண்களை தொடரும் பாலியல் தொல்லைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த செடி வெறும் அழகுக்காக மட்டுமில்ல… இதுல இவ்ளோ மருத்துவ சக்தி இருக்கு…

nathan

சிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில் -தெரிஞ்சிக்கங்க…

nathan

பித்தத்தை சமன்படுத்தும் நெல்லிக்காய்

nathan

விக்கலை போக்கும் வெல்லம்

nathan