பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும்.
நமது உடலில் இருக்கும் சாதாரண செல்கள், சில பல காரணங்களால் புற்றுநோய் (breast cancer) செல்களாக மாறுவதாலே புற்றுநோய் ஏற்படுகிறது.
இதனை ஆரம்ப கட்டத்திலே கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும்.
அந்தவகையில் இதனை தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கையை எடுக்கலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- ஆண்டுதோறும் மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- ரத்த உறவுகளில் யாருக்கும் மார்பகப் புற்றுநோய் இருந்தால் தொடர் பரிசோதனை அவசியம்.
- குண்டான பெண்கள் கண்டிப்பாக எடையை குறைத்தாக வேண்டும்.
- தினமும் 3 கி.மீ நடக்க வேண்டும். 10 நிமிடங்களில் 1 கி.மீ தூரத்தை வேகமாக நடப்பது நல்லது.
- எண்ணெய், கொழுப்பு உணவுகள தவிர்த்து, நிறைய காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ளவும்.
- அசைவப் பிரியர்கள் இறைச்சி உணவுகளை பொரித்து உண்பதை தவிர்த்து குழம்பாகச் சாப்பிடுவது சிறந்தது.
- நேரடியாக நெருப்பில் நீண்ட நேரம் சமைக்கப்படுகிற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- மனதை லேசாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதிக மன உளைச்சல், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பாதுகாப்புப் படையை அழித்து விடும்.
என்ன சிக்கசை எடுத்து கொள்ளலாம்?
பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்த அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ, சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது.