28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
weight S
எடை குறைய

பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?

உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை  சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.

சேர்க்க வேண்டிய உணவுகள்:
6.00 AM

GREEN TEA – யை  பால், சர்க்கரை இல்லாமல் காய்ச்சிய சுடு நீரில் போட்டு 10  நிமிடம் கழித்து பருக வேண்டும்.

8.00 AM

வேக  வைத்த பாசிப்பயிறு (அ) கொண்டைகடலை, சுண்டல் (அ) காணப்பயிறு + ஒரு கப் பச்சை காய்கறிகள்.

11.00 AM

முட்டைகோஸ் சூப்  (அ) காய்கறி சூப்.

1.00 PM

ஒரு கப் சாதம் + ஒரு கப் காய்கறிகள் + ஒரு கப் கீரை.

4.00 PM

GREEN TEA + ஒரு  ஆப்பிள் (அ)  ஒரு ஆரஞ்சு (அ) ஒரு கொய்யா (அ) ஒரு கீத்து பப்பாளி.

7.30 PM

கம்பு (அ) கேப்பை (அ) கேழ்வரகு தோசை (2 NOS) + தக்காளி சட்டினி மட்டும்.

தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:

கோதுமை, ஓட்ஸ், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகள், மற்றும் கிழங்குகள், இனிப்பு வகைகள், பேக்கரி வகைகள், பொறித்த உணவுகள், தேங்காய், மட்டன், முட்டை, சிக்கன், மீன், பால் பொருட்கள், இனிப்பு வகையான பழங்கள் ( வாழை, சப்போட்டா, திராட்சை, மாம்பழம், பலாப்பழம்), பேரிட்சை, பருப்பு ( முந்திரி, பாதாம், பிஸ்தா), கூல்ட்ரிங்க்ஸ், சாக்கலேட்ஸ், பிஸ்கட்ஸ், ஐஸ்கிரீம், பார்லி, எண்ணெய் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள்.

எளிமையான உடற்பயிற்சிகள்:

ரொம்ப கடினமான உடற்பயிற்சிகள்  தேவையில்லை. வெறும் கயிற்றை வைத்தே உடற்பயிற்சி செய்யலாம். அதுதான் POCKET ROPE GYM.  வெறும் 250 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கிறது. அதோடு, உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.  அதில் கொடுத்துள்ள உடற்பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது.

கண்டிப்பாக இரண்டே வாரத்தில் சுமார் மூன்று கிலோ எடையை குறைத்து விடலாம்.

மேற்கண்ட உணவு கட்டுப்பாடும், உடற்பயிசியும் கடைபிடிப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இருந்தாலும் மிக மிக அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக OBESITY DOCTOR மூலம் ஆலோசனை செய்த பின்னர் இம்முறைகளை கடைபிடிக்கவும். ஏனெனில் அவர்களுக்கு அதிகப்படியான எடையை குறைக்க மாத்திரைகளும், மருந்துகளும் கொடுப்பார்கள்.

உடல் எடையை குறைத்த பின்னர் சரிவிகித உணவும், சீரான உடற்பயிசியும் அவசியம் தேவை. அப்பொழுது தான் குறைத்த எடையை கூடாமல் சீராக வைத்துக் கொள்ள முடியும்.

Related posts

ஸ்லிம்மாக வேண்டுமா? இஞ்சி கற்றாழை ஜூஸ் குடிங்க

nathan

உடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க

nathan

உடல் எடையை விரைவில் குறைக்கும் கறிவேப்பிலை ஜூஸ்

nathan

கவலைய விடுங்க…? உடல் பருமனை குறைப்பது எப்படினு கவலபடுரீங்கள…?

nathan

உடல் எடை குறைக்கனுமா? இதோ கவர்ச்சி அழகி கிம் கர்தாஷியனின் புரோட்டீன் டயட்!

nathan

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:

nathan

குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் டிரெட்மில் பயிற்சி

nathan

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கான சில டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கும்

nathan