28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
80da24d0 299d 49c3 bbdc dd834f8f0d4d S secvpf
ஆண்களுக்கு

பெண்கள் விரும்பும் ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும்

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறுப டும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவ ர்களை கவர்வது எது, அவர்க ள் எதிர்பார்ப்புகள் என்ன?

ஒரு ஆணின் கவர்ச்சி என்ன.ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான

பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி’ என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண் டும் என ‘ fair complexion’ உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவ னின் நிறத்தில் அல்ல என்ப தே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத்திற்கு முக்கிய த்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் ‘மீசை’க்கு முக்கி யத்துவம் கொடுக்கிறார்கள். ‘மீசை’ ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ‘ தாடி’ பிடிப்பதில்லை.

காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வள ர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பது தான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்ற மளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ‘ ட்ரெஸ்ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள்.

பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் – டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடா து. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது.

அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும். (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

80da24d0 299d 49c3 bbdc dd834f8f0d4d S secvpf

Related posts

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

sangika

ஆண்களுக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியுதா?

nathan

இது மீண்டும் முடி வளர வேர்கால்களை உருவாக்கி தருகிறது!…

sangika

ஆண்களுக்கு விரைவில் தாடி வளர டிப்ஸ்

nathan

ஆண்கள் தினமும் ஹேர் ஜெல் பயன்படுத்தலாமா?

sangika

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ் ! நீங்களும் முயற்சி செய்யுங்கள் ………..

nathan

ஆண்களே! மென்மையான தாடி வேண்டுமா? அப்ப இத தினமும் யூஸ் பண்ணுங்க…

nathan

ஆண்களே! வழுக்கை விழுவது போன்று உள்ளதா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க…

nathan

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற!

sangika