தேவையான பொருட்கள்
கொள்ளு – 1/2 கப்
வறுத்துப் பொடித்த பார்லி – 1/4 கப்
சீரகத்தூள் – 1 சிட்டிகை,
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
பூண்டு – 4 பல்
உப்பு – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
:
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கொள்ளு, பார்லியை தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
• கொள்ளு, பார்லி, பூண்டு ஆகியவை சேர்த்து மிக்சியில் நன்கு வேகவைக்கவும்.
• வெந்ததும் ஒன்றும் பாதியாக கடைந்து அதில்
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி கஞ்சி காய்ச்சவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழை துவி இறக்கவும்.
• இதனை தினமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். உடல் எடை வேகமாக குறையும்.