32.1 C
Chennai
Monday, Oct 28, 2024
சரும பராமரிப்பு

ஹாட் அரோமா ஆயில் மெனிக்யூர் பற்றி தெரியுமா? கரடுமுரடான கையை மிருதுவாக மாற்றும்!

ஹாட் ஆயில் மெனிக்யூர் பெரிய ஸ்பாக்களில் செய்யப்படும் கைக்கான ஸ்பா. செய்வதற்கான விலை அதிகம். ஆனால் பலன் பல கிடைக்கும்.

இது விரல்களை ஆரோக்கியமாக வளரச் செய்யும். கரடுமுரடான கைகள் பஞ்சு போல் மாறும். கைகளில் உள்ள வறட்சியை போக்கி ஊட்டம் அளிக்கும்.

இந்த ஸ்பாவை செய்வதற்கு நீங்கள் பார்லர் சென்று பணத்தை விரயம் செய்ய தேவையில்லை. இதனை வீட்டிலேயே செய்யலாம். எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையானவை : சூரிய காந்தி எண்ணெய் – சம அளவு மற்றும் ஆலிவ் எண்ணெய் பாதாம் எண்ணெய் – 5 ஸ்பூன் விட்டமின் ஈ மற்றும் ஆலிவ் எண்ணெய் – சம அளவு தேயிலை மர எண்ணெய் – விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ரோஜா இதழ்கள்

செய்முறை – 1 முதலில் எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலக்குங்கள். பிறகு விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து அதிலுக்கும் எண்ணெயை கலவை எண்ணெயில் போடவும்.

செய்முறை – 2 இந்த கலவையை குறைந்த தீயில் அடுப்பை வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றுங்கள் அல்லது மைக்ரோவேவில் வைத்தால் 8 நொடிகள் சூடுபடுத்தவும்.

செய்முறை – 3 பிறகு இந்த எண்ணெயில் ரோஜா இதழ்களை போடவும். சில துளி லாவெண்டர் எண்ணெயை ஊற்றவும். இதில் உங்கள் கைகளை மூழ்க வையுங்கள். வெதுவெதுப்பான சூட்டில் உங்கள் கைகளுக்கு இதமாகவும் ரத்த ஓட்டம் பாயவும் உதவும்.

செய்முறை – 4 சூடு ஆறியது மறுபடியும் சூடு படுத்தி கைகளை விடவும். 20 நிமிடங்கள் ஆனதும் கைகளை வெளியே எடுத்து கைகளில் உள்ள எண்ணெயை கை முழுவதும் மசாஜ் செய்யுங்கள்.

செய்முறை – 5 10 நிமிடம் கழித்து கைகளை கடலைமாவு போட்டு கழுவலாம். உங்கள் கைகளா என ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் கைகள் மிருதுவாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

நன்மைகள் : மாதம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த ஹாட் ஆயில் மெனிக்யூர் செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும். மசாஜ் செய்யும்போது அந்த அரோமா எண்ணெய் சருமத்தால் உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் சுருக்கம் வராமல் கைகள் இளமையாகஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம்.

hands 10 1478754290

Related posts

சரும பராமரிப்பில் செய்யக்கூடாதவை

nathan

சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க டிப்ஸ்

nathan

உங்க சருமத்தைப் பொலிவாக்க முல்தானிமட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்துவது.?சூப்பர் டிப்ஸ்…

nathan

முகம் பளபளப்பாக, கண்கள் அழகு பெற, தோலின் நிறம் பொலிவு பெற……

sangika

தினமும் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள்!!!

nathan

பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!

nathan

சோப், பாடிவாஷ் யாருக்கு எது பெஸ்ட்?

nathan

மழைக்கால சரும வறட்சியைப் போக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க !!

nathan

இத படிச்சா.. இனிமேல் வாழைப்பழ தோலை தூக்கி போடவே மாட்டீங்க…

nathan