தேவை:
கடலை மாவு – 2 கப்.
சர்க்கரை – 3 கப்.
ஏலக்காய் – சிறிதளவு.
முந்தரி, பாதம், பிஸ்தா, திராட்சை, நெய் – தேவையான அளவு.
செய்முறை:
கடலை மாவுடன் தேவையான அளவு தண்ணீ ர் சேர்த்து தோசை மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
கடாயில் பொரிக்க தேவையான அளவு நெய் ஊற்றி, கரைத்து வைத்துள்ள மாவை ஜாரணியில் எடுத்து மெதுவாக தட்டித் தட்டி ஊற்றினால் முத்து முத்தாக பூந்தி விழும். அது நெய்யில் நன்றாக வெந்ததும் எடுத்து தனியாக வைக்கவும்.
முந்தரி, பாதாம், திராட்சை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரையைப் போட்டு 4 கப் தண்ணீ ர் சேர்த்து கெட்டியாக பாகு காய்ச்சி அதில் பொரித்த பூந்தி, வறுத்த முந்தரி- பாதாம் கலவையைச் சேர்த்து 10 நிமிடம் கிளறினால் பிறகு இறக்கி நன்றாக ஆற வைத்து உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்.