வீட்டுக்கு வெள்ளை நிற பெயிண்ட் எந்த ஒரு வசீகரத்தையும் கொடுப்பதில்லை. ஆனால் அதை உங்கள் கற்பனை திறன் கொண்டு அலங்கரித்தால் அழகு கூட்ட முடியும். வெள்ளை நிற பூச்சு பூசுவதால் இயற்கையான வெளிச்சம் வீட்டிற்கு கிடைக்கும், வீடு சற்றே பெரியதாக காணப்படும், எல்லாவற்றையும் விட சுத்தமாக காணப்படும். இந்த வெள்ளை நிறத்தை இன்னும் அழகுப்படுத்த இதோ சில டிப்ஸ்.
உங்கள் வீட்டின் வெள்ளை நிறத்தின் மீது உங்கள் கற்பனையை செலுத்துங்கள். உங்கள் கடந்த காலத்து நினைவாக வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் பல வித கற்பனைகள் உங்கள் வீட்டின் அழகை மேலும் கூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பொழுது வெள்ளை நிற சுவற்றை அலங்கரிக்கும் சில கற்பனை வழிகளைப் பார்ப்போமா…!
மனம் கவர்ந்த நினைவுகள்
நீங்கள் ஆசையாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் உங்கள் நினைவுகளை மகிழ்ச்சிப்படுத்துபவை. அவற்றை சேகரித்து வீட்டின் சுவர்களை அலங்காரம் செய்யுங்கள். புகைப்படங்களின் சட்டங்களை மின் விலக்குகள் கொண்டு அலங்காரம் செய்தல் கூடுதல் அழகை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உங்கள் பெயிண்ட் ப்ரஷை எடுக்கும் நேரம்
கற்பனை திறனை காட்டும் நேரம் இது என்று நினைத்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்ற நிறங்களைக் கொண்டு சுவர்களை பெயிண்ட் செய்யுங்கள். ஒரே நிறத்தை பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. பல நிறங்களை கொண்டும் செய்ய முடியும். இதனால் பிரகாசமான வெள்ளை சுவர் மேலும் அழகாக இருக்கும்.
நிறங்களும்.. துணிகளும்..
வீட்டை அலங்கரிக்க நிறங்களோடு சேர்த்து துணிகளையும் பயன்படுத்தலாம். அடர்ந்த நிறத்தை கொண்ட வெல்லெட் கார்பெட்டை சுவர்களை அலங்கரிக்க பயன்படுத்தலாம். அமர்ந்து பேசும் இடத்தில் அழகான புகைப்படங்களை வைத்தால், அது கூடுதல் அழகைக் கொடுக்கும்.
அழகிய அலமாரி
வெறுமையான வெள்ளை சுவற்றில் அலமாரி வைக்கலாம். அதையும் மரத்தில் செய்யப்பட்ட அலமாரி இன்னும் அழகு. கதவு கொண்டதோ, திறந்த அலமாரியோ எதுவாக இருந்தாலும் அழகு தான். அவற்றுக்கு அழகிய நிறங்களைக் கொண்டு வண்ண பூச்சு செய்தால் கூடுதல் அழகு தான்.
அடர்ந்த நிறத்தாலான பொருட்கள்
நல்ல அடர்ந்த நிறத்தாலான பொருட்களைக் கொண்டு அலங்கரிக்க கற்று கொள்ளுங்கள். இதனால் வீட்டின் கவர்ச்சி மேலும் கூடும். மேலும் வீட்டிற்கு கூடுதலான வெளிச்சம் கிடைக்கும்.