26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
22 622745f33722e
Other News

வெயில் காலம் தொடங்கியாச்சு! இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

சுட்டெரிக்கும் கோடை காலம் இப்போதே தொடங்கி விட்டது, கூடவே அம்மை, அரிப்பு, சொறி, நீர்சத்து குறைபாடு போன்றவை பல நோய்களும் நம்மை தாக்க தொடங்கிவிடும்.

இதற்கு காரணம் கோடை காலத்தில் நம் உடலின் வெப்பமானது விரைவில் அதிகரித்துவிடும், எனவே சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அந்தவகையில் கோடைக் காலத்தில் எந்தவகையான உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

காரத்தை தவிர்க்கவும்
புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை, மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

 

காபி, தேநீர் வேண்டாமே
காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது.

இதேபோன்று அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை, எனவே இவற்றை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.

 

அசைவ உணவுகளுக்கு நோ
நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது.

சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்’ உணவு வகைகளையும் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். கோதுமை, மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

 

Related posts

கதாநாயகி டாப்ஸி ரகசிய திருமணம்

nathan

பேஸ்புக்கில் அந்தரங்க புகைப்படங்கள்..!இளம்பெண், காதலன் தற்கொலை!

nathan

Selena Gomez’s Pilates Trainer Reveals 3 Booty-Perfecting Workouts

nathan

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்

nathan

சென்னை வந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் தங்கம் பறிமுதல்

nathan

கர்ப்பிணிகள் பலாப்பழம் சாப்பிடலாமா?

nathan

இத்தனை கோடியா…தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் ஜெயிலர்..

nathan

மதுரை புதூரில் முன்னாள் ராணுவ வீரர் மனைவி, மகளுடன் எடுத்த விபரீத முடிவு!!

nathan

செவ்வாய் பெயர்ச்சி : தொழிலில் அதிக லாபம் பார்க்கப்போகும் ராசியினர்

nathan