26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Butterchicken
அசைவ வகைகள்

வெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )

தேவையான பொருள்கள் :

பதப்படுத்த :
சிக்கன் துண்டுகள் – ½ கிலோ ; நன்கு கழுவியது
இஞ்சி பூண்டு விழுது – ½ தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தயும் எடுத்துக் கொண்டு, நன்கு கலந்து, மூடி, ஒரு மணி நேரம் ஊரவைக்கவும்

பசை #1 தயாரிக்க :
இஞ்சி – 1 இன்ச் துண்டு
பூண்டு – 5 பல் ; உரித்தது
கிராம்பு – 4
பட்டை – 1 இன்ச் துண்டு
ஏலக்காய் – 2

இவை அனைத்தையும் ஒரு மிக்சியில் விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்

பசை #2 தயாரிக்க :
தக்காளி – 5 ; நடுத்தர அளவு

தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நன்கு அரைத்து, வடிகட்டி அத சாறு பிழிந்து, வைக்கவும்

பசை #3 தயாரிக்க :
முந்திரி பருப்பு – 8
கசகசா – 1 தேக்கரண்டி
காய்ந்த வெந்திய கீரை ( கஸூரி மேத்தி ) – 1 தேக்கரண்டி

இவை அனைத்தையும் சுடுநீரில் அரை மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, மிகவும் மென்மையான விழுதாக அரைத்து கொள்ளவும்

வெண்ணெய் சாறு தயாரிக்க :
வெண்ணெய் – 5 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் – 3 ( விரும்பினால் )
( வெண்ணெயில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளதால், அதற்கு பதிலாக எண்ணெயை உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளுங்கள் )
சீரகம் – 1 தேக்கரண்டி
பிரியாணி இலை – 2
பெரிய வெங்காயம் – 2 ; சன்னமாக நறுக்கியது
சிகப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சிகப்பு கலர் பொடி – 1 சிட்டிகை ( விருப்பமானால் )
பால் – 1/2 கப் (டயட்டில் இல்லாதவர்கள், இதற்கு பதிலாக ஃப்ரெஷ்க்ரீம் சேர்க்கலாம் )
சர்க்கரை – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – கையளவு ; அரிந்தது

செய்முறை :

1) ஒரு வாணலியில், 2 தேக்கரண்டி வெண்ணெயை உருக்கவும்

2) அதில் பதப்படுத்தப்பட்ட கோழியை இட்டு, அவை அரை வேக்காடாக வேகும் வரை சமைக்கவும். இவ்வாறு சமைப்பதால் கோழியில் உள்ள உபரி நீர் வெளியேறி, பின்பு அதை சாறுடன் கலக்கும் போது அதன் கெட்டித் தன்மையை நீர்க்கச் செய்யாமல் உதவும் என்பதை கவனம் கொள்ளவும்.

3) இன்னொரு நான் ஸ்டிக் கடாயில், மீதமுள்ள வெண்ணெயை உருக்கி, சீரகம், பிரியாணி இலை, மற்றும் அரிந்த வெங்காயம் சேர்த்து வறுக்கவும்

4) வெங்காயம் பொன்னிறமானதும், பசை #1 சேர்த்து நன்கு வதக்கி, பசை #2 அல்லது தக்காளி சாறையும் கலக்கவும்.

5) இப்போது உப்பு, சர்க்கரை சேர்த்து ஒரு முறை கலந்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், சிகப்பு கலர் பொடி ஆகியவற்றை சேர்க்கவும்.

6) அரை வேக்காடான கோழியையும் ஒரு கப் நீரையும் சேர்த்து, கலந்து, மூடி வைத்து 10 நிமிடம், மிதமான தீயில் சமைக்கவும்

7) எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது, பால் சேர்க்கவும்

8) ஐந்தே நிமிடங்கள் கொதித்ததும், பசை #3 சேர்த்து, மேலும் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

9) அடுப்பை அணைத்து, கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து, சூடாக பரிமாறவும்.
Butterchicken

Related posts

கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்

nathan

தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு

nathan

சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

nathan

கறிவேப்பிலை சிக்கன்

nathan

மட்டன் சுக்கா

nathan

சைனீஸ் இறால் வறுவல்

nathan

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

nathan

நண்டு மசாலா

nathan

சுவையான தயிர் சிக்கன்

nathan