உடற்பயிற்சி என்றாலே கஷ்டம். உடல் வலிக்க செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ரசித்து அனுபவித்து, ஆடி செய்யக்கூடிய பயிற்சி தான் சும்பா நடனம். நடனப்பயிற்சி என்பதால் பெண்களும் அதில் லயித்து போய்விட அவர்களுக்கு சும்பா மீது அளவுகடந்த காதல் வந்து விட்டது.
உடற்பயிற்சிக்காக இந்த சும்பா நடனத்தை வடிவமைத்தவர் கொலம்பியாவை சேர்ந்த நடன வடிவமைப்பாளர் ஆல்பர்ட்டோ பேட்டாபேரஸ். 1990-ல் இதை வடிவடைத்தார். எளிமையான உடற்பயிற்சியுடன் கூடிய நடன அமைப்பு என்பது தான் சும்பாவின் சிறப்பு. தூக்கு, இழு, மூச்சைப்பிடி, உடலை வளை என்பது போன்றவை அதில் இல்லை.
ஏரோபிக்ஸ் போன்று தோன்றினாலும் அதில் இருந்து ரொம்பவும் வித்தியாசப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு. இன்னும் தெளிவாக சொன்னால் நடனம் மற்றும் ஏரோப்பிக்ஸ் இரண்டும் கலந்து பெற்றெடுத்த குழந்தை என்று சும்பாவை குறிப்பிடலாம். இது பெண்களுக்கு ஏற்ற அசைவுகளுடன் கூடிய பயிற்சிதான் என்றாலும் ஆண்கள் வேலையால் ஏற்படும் சோர்வை விரட்டவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் சும்பா பயிற்சி பெறுகிறார்கள். எளியபயிற்சி மூலம் ஆரோக்கியமான உடலையும்- மனதையும் உருவாக்குவதுதான்.
முதுகெலும்பு போன்றவைகளை இந்த பயிற்சி பலப்படுத்துகிறது. இதனை 45 நிமிடங்கள் செய்தால் போதும். எல்லாபருத்தினருக்கும் ஏற்ற நடனம் இது. முதலில் உடல் தசைகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் இந்த பயிற்சி ஆரம்பிக்கிறது. 10 நிமிடங்கள் தொர்ச்சியாக தரப்படும் இந்த பயிற்சியில் விரல்களில் இருந்து உடலில் அனைத்து பாகங்களுக்கும் தூண்டுதல் தரப்படுகிறது. பின்பு நிமிர்ந்து வாமிங், ஜம்பிங், ஜாகிங், ஸ்டிரச்சிங் போன்ற பயிற்சிகள் 5 நிமிடங்கள் வீதம் தொடரும். அடுத்து தான் நான்ஸ்டாப் சுப்மா ஸ்டைல் தொடங்குகிறது.
ஏற்கனவே பெற்ற பயிற்சிகளை மொத்தமாக நடன வடிவத்தில் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பயிற்சிகள் அனைத்தையும் அனைவரும் சேர்ந்து செய்வதால் சோர்வு ஏற்படுவதில்லை. பின்பு தியானத்துடம் நடனப்பயிற்சி நிறைவடைகிறது. நடக்கும் போதும், ஓடும் போதும் நமது உடலில் எவ்வளவு கலோரி செலவாகுமோ அதே அளவு சும்பா நடனத்திலும் வெளிவேறுகிறது. ஒரு மணி நேரத்தில் 750-800 கலோரி செலவாகும். உடலில் இருக்கும் அதிக கொழுப்பை கரைத்து, கட்டழகையும், கவர்ச்ச்சியையும் சும்பா தருகிறது.