வயதான காலத்தில் பெண்களை தாக்கும் நோய்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
வயதான காலத்தில் பெண்களை தாக்கும் நோய்கள்
முதுமையில் இருபாலாருக்குமே (ஆண்,பெண்) நோய்கள் வர வாய்ப்புண்டு. ஆனால் பெண்கள் தான் ஆண்களைவிட நீண்டகாலம் வாழ்கிறார்கள். அதற்கான காரணங்கள் – மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஆண்களுக்கே அதிகம். ஆண்களுக்குத்தான் அதிக அளவில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் போன்றவற்றால் பல நோய்கள் வர வாய்ப்பு உண்டு.
பெண்களைவிட ஆண்கள்தான் விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மனஅழுத்தம் ஆண்களுக்கே அதிகம். பெண்களுக்கு வயதானகாலத்தில் வரும் நோய்களை பற்றி பார்க்கலாம்.
வயதான காலத்தில் பெண்களைத் தாக்கும் முக்கிய நோய்கள் :
– மாதவிடாய் நிற்பது (Menopause).
– எலும்பு வலிமை இழத்தல்.
– மாதவிடாய் நின்ற பின்பும் ரத்தப்போக்கு (Post menopause bleeding) ஏற்படுதல்.
– இன உறுப்பில் அரிப்பு.
– கருப்பை கீழ் இறங்கல்.
– சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை.
– புற்றுநோய்கள்.
– தைராய்டுத் தொல்லைகள்.
– அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia)
– உடற்பருமன் மற்றும் மலச்சிக்கல்.