சிலருக்கு முகம் அழகாக இருக்கும். உடலும் கச்சிதமாக வைத்திருப்பார்கள். ஆனல் முகத்திலுள்ள ரெட்டை நாடி பார்ப்பதற்கு விகாரமாய் அழகை கெடுப்பது போலிருக்கும்.
அது மட்டும் இல்லாமல் இருந்தால் தேவதையாக அல்லது தேவனாக காட்சி அளிப்போம் என என்றைக்காவது உங்களுக்கு தோன்றியிருந்தால் இந்த குறிப்பு உங்களுக்குதான்.
நமது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை, கொலாஜன் உற்பத்தியை பொறுத்து அமையும். இளம் வயதில் கொலாஜன் அதிகமாக உற்பத்தியாகும். வயது ஆக ஆக, கொலாஜன் குறைய ஆரம்பிக்கும். இதனால் சருமம் தளர்ந்து தொங்க ஆரம்பிக்கும். இதனால் மிருதுவான சருமம் தொங்கிப் போய் விகாரமாய் காணப்படும்.
அதற்காக கவலைப்பட தேவையில்லை. அவ்வப்போது எண்ணெயால் கழுத்திலிருந்து முகம் வரை மேல் நோக்கி சின்ன சின்ன மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதோடு இங்கிருக்கும் இந்த அழகுக் குறிப்பை பயன்படுத்துங்கள். உங்களுக்கு நல்ல வகையில் பலன் தரும்.
தேவையானவை: முட்டையின் வெள்ளைக் கரு – 2 தேன் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன் வாசனை எண்ணெய் – 10 துளிகள்
முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு, வாசனை எண்ணெய் ஆகியவற்றை கலந்து முகம் மற்றும் நாடியின் அடிப்பகுதி, கழுத்து ஆகிய பகுதிகள் முதலில் ஒரு கோட்டிங்க் அடித்து லேசாக காய்ந்த பின் , இன்னொரு கோட்டிங் அடிக்கவும். பின்னர் படுத்துக் கொள்ளுங்கள்.
நன்றாக சருமம் இறுகிப் பிடிக்கும் வரை காய விடுங்கள். நன்றால காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சதை அதிகமாக தொங்கினால் வாரம் ஒருமுறை செய்யலாம். இல்லையென்றால் 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்யவும். விரைவில் சதை இறுகி இளமையான தோற்றம் தரும்.