26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
idly maavu bonda 04 1467634686
சிற்றுண்டி வகைகள்

மொறுமொறுப்பான… இட்லி மாவு போண்டா

மாலையில் மேகமூட்டத்துடன் இருக்கும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட நினைத்தால், அதுவும் வித்தியாசமாக செய்து சுவைக்க ஆசைப்பட்டால், வீட்டில் இருக்கும் இட்லி மாவைக் கொண்டு போண்டா செய்து சுவையுங்கள்.

இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, மிகவும் ஈஸியாக செய்யலாம். இங்கு அந்த இட்லி மாவு போண்டாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை: முதலில் இட்லி மாவுடன் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் சிறிதும் சேர்க்காமல் கலவை சற்று கெட்டியாக இருக்குமாறு போண்டா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகம் இருந்தால், அதில் அரிசி மாவு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இட்லி மாவு போண்டா ரெடி!!!

idly maavu bonda 04 1467634686

Related posts

சூப்பரான மினி சாம்பார் இட்லி செய்வது எப்படி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா ஸ்வீட் சிப்ஸ்

nathan

உழுந்து வடை

nathan

மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan

வெஜ் கட்லெட் லாலிபாப்

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

nathan

முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி

nathan

சிம்பிளான. சீஸ் மக்ரோனி

nathan

வேர்க்கடலை லட்டு

nathan