பாலில் துத்திப் பூவை பொடி செய்து சர்க்கரை கலந்து அருந்தி வர கபம் தீரும்.
* துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளித்து வர பல் ஈறுகளில் வலி குறையும்.
* சுக்காங்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றின் சாறை எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட மூலம் குறையும்.
* முளைக்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறுபருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
* கசகசா, துத்தி இலைசேர்த்து அரைத்து தடவ மூட்டு வலி குறையும்.
* துத்திக்கீரை சாப்பிட்டு வர இடுப்பு வலி குறையும்.
துத்திக்கீரை கஷாயத்தைச் சர்க்கரை சேர்த்து அருந்த குடல்புண் குறையும்
துத்தி இலையைப் பொடி செய்து தடவ தோல் நோய் குறையும்.
* துத்தி இலையை கீழ் நோக்கி மெதுவாகத் தேய்த்து வெந்நீர் ஒற்றடம் கொடுக்க சுளுக்கு குறையும்.
* துத்தி பூவை பொடி செய்து கற்கண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வாந்தி குறையும்.
* துத்திக்கீரை, கடுக்காய் கஷாயமாக்கி சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறையும்.