26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
hyOPGDF
முகப் பராமரிப்பு

முக அழகை கெடுக்கும் கருவளையம்

ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க எளிய வழிகள் உள்ளன.

தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.

வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.

தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்து ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் கருவளையம் மறையும்.

பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.hyOPGDF

Related posts

முகம் ஜொலிக்கணுமா?

nathan

கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

sangika

பெண்களே பார்லரே போகாம கலராகணுமா?…

nathan

த்ரெட்டிங் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்

nathan

நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

sangika

உங்க சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த விஷயங்கள மறக்காம செய்யணுமாம்…

nathan

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும்……

sangika

முக அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்- இதை மட்டும் பயன்படுத்துங்கள்

nathan

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika