24.9 C
Chennai
Tuesday, Dec 17, 2024
shutterstock 249479911 16412
முகப் பராமரிப்பு

முகப் பொலிவுக்கு உதவும் நைட் க்ரீம்ஸ்!

இளமையாக, சுறுசுறுப்பாக, உற்சாகமாகச் செயல்பட ஆழ்ந்த உறக்கம் அவசியம். அது 7 முதல் 8 மணி நேரத் தூக்கமாக இருப்பது நல்லது. பொதுவாக ஆழ்ந்த உறக்கம், உடலை மட்டுமல்லாமல் மனதையும் இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக, மனஅழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும். மனஅழுத்தமும் பல்வேறு சரும நோய்களுக்கு முக்கியக் காரணியாக அமைகிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். எனவே, ஆழ்ந்து உறங்குவோம், அழகான சருமத்தைப் பெறுவோம். தூங்கும் நேரத்தில்தான் நம்முடைய சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தூங்கும்போது, கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகமாக புதிய செல்கள் உருவாவதாக ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் ஃபேஸ்பேக், நைட் க்ரீம்ஸ் போடுவதற்கு சரியான நேரம் நாம் தூங்கும் நேரம்தான். `இரவு நேரத்தில் நைட் க்ரீமா?’ என்ற பயம் வேண்டாம். நம் வீட்டிலிருக்கும் பொருள்களைக் கொண்டே சில நைட் க்ரீம்களைத் தயாரிக்க முடியும்.

நைட் க்ரீம்

கிரீன் டீ நைட் க்ரீம் (Green Tea Night cream)

கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என்று சொல்லப்படும் உயிர்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. இது புற ஊதாக் கதிர்வீச்சால் சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும். சீக்கிரமே வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கும். சருமப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் கிரீன் டீயில் உள்ளது. சோரியாசிஸ் போன்ற சருமப் பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றலும் கிரீன் டீ-க்கு உண்டு. முகப்பரு இல்லாத `பளிச்’ சருமம் கிடைக்க கிரீன் டீ உதவும்.க்ரீன் டீ

தேவையானவை:

தேன் மெழுகு – 600 கிராம்

பாதாம் எண்ணெய் – 30 மி.லி

தேங்காய் எண்ணெய் – 30 மி.லி

கிரீன் டீ – 2 பாக்கெட்

செய்முறை:

மேலே குறிப்பிட்ட நான்கு பொருட்களையும் சேர்த்து லேசாக சூடுபடுத்திக்கொள்ளவும். கிரீன் டீ பாக்கெட்டைக் கொதிக்கும் நீரில் போட்டு, அந்தத் தண்ணீரை வடிகட்டி, இந்த எண்ணெய்க் கலவையோடு நன்றாகக் கலந்து மென்மையான பேஸ்ட்டாக மாற்றிக்கொள்ளவும். இந்த க்ரீமை இறுக்கமாக அடைக்கப்பட்ட ஒரு பாட்டிலில் வைத்து, ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

இதை குளிர் சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது, வைத்தால் கெட்டியாக மாறிவிடும்.

பயன்படுத்தும் முறை:

தூங்குவதற்கு முன்னர், முகத்தைக் கழுவி நன்றாகத் துடைத்துவிட்டு, தேவையான அளவு எடுத்து முகத்தில் தடவி, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்து முகத்தைத் தண்ணீரில் கழுவ வேண்டும். சோப் பயன்படுத்தக் கூடாது.

நைட் கிரீம் பயன்படுத்தும் முறை

ஆப்பிள் நைட் க்ரீம்

ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை அதிகமாக உள்ளன. மேலும், இதிலுள்ள மாலிக் அமிலமும், ஆன்டிஆக்ஸிடன்ட்டும் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும்.

தேவையானவை:ஆப்பிள்

ஆப்பிள் – 1

ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்

பாதாம் எண்ணெய் – 2 டீஸ்பூன்

ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

ஆப்பிள் பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஓர் அகலமான பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, அதனுள் இன்னொரு பாத்திரத்தை வைத்து கலவையைச் சூடுபடுத்த வேண்டும். இந்தக் கலவை ஆறியதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கி சுத்தமான காற்றுப் புகாத டப்பாவில் போட்டு, ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

முகத்தைக் கழுவிவிட்டு, தேவையான அளவு இந்த நைட் க்ரீமை முகத்தில் அப்ளை செய்து நன்றாகக் காய்ந்ததும் தூங்கப் போகலாம். அடுத்த நாள் காலையில் முகத்தைக் கழுவினால் மிருதுவான, பளபளப்பான சருமம் கிடைக்கும்.

***************

ஆலிவ் ஆயில் நைட் க்ரீம்

ஆலிவ் எண்ணெய் சரும நிறத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுகளைக் குறைத்து மிருதுவான, பளபளப்பான சருமத்தைக் கொடுக்கும்.

தேவையானவை:ஆலிவ் ஆயில்

ஆலிவ் எண்ணெய் – 1/4 கப்

தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

தேன் மெழுகு – ஒரு டீஸ்பூன்

வைட்டமின் இ மாத்திரைகள் – சிறிது

செய்முறை:

மேலே குறிப்பிட்ட எண்ணெய்களை ஒரு அடி கனமான பாத்திரத்தில் இட்டு மெலிதான தீயில் சூடுபடுத்த வேண்டும். இந்தக் கலவை ஆறியதும் அதில் ஒரு டீஸ்பூன் வைட்டமின் இ மாத்திரைகளைச் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மனோரஞ்சிதம் மற்றும் லாவெண்டர் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம். இதை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைத்து தினமும் பயன்படுத்தலாம்.

பளபளப்பான முகம்

பயன்படுத்தும் முறை:

முகத்தைக் கழுவிவிட்டு, இந்த க்ரீமை அப்ளை செய்து மெலிதாக மசாஜ் செய்துவிட்டு தூங்கச் செல்லலாம்.shutterstock 249479911 16412

Related posts

முகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்|

nathan

பிளாக் ஹெட்களை போக்க உதவும் அசத்தலான டிப்ஸ்!!!

nathan

சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி சூப்பர் டிப்ஸ்….

nathan

முகத்தில் உள்ள முதுமை சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள்! சூப்பர் டிப்ஸ்

nathan

முகம் எப்போதும் பொலிவுடன் தோற்றமளிக்க முக்கியமானவை

nathan

முகம் கழுவும் போது செய்ய வேண்டியவை

nathan

நீங்கள் ஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா? அப்ப இத படிங்க!

nathan

முகம் ஜொலிக்கணுமா?

nathan

முகம் வசீகரமாக இருக்க…

nathan