23.3 C
Chennai
Sunday, Dec 15, 2024
04 1486205435 3washing
முகப் பராமரிப்பு

முகத்தை கழுவும்போது இதெல்லாம் நீங்கள் செய்கிறீர்களா?

முகத்தை தூய்மையாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்து கொள்வது ஒரு கலை. முகத்தின் சருமத்தை தூய்மையாக வைத்திருக்க அவ்வப்போது முகத்தை தண்ணீரால் கழுவுவதால் வறட்சியான சருமத்தை போக்க உதவும்.

ஆனால் முகத்தை தூய்மையாக வைத்திருப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. நம்மையும் அறியாமல் முகம் கழுவுவதில் நாம் செய்யும் ஒருசில தவறுகளால் முகம் புத்துணர்ச்சி அடைவதற்கு பதிலாக பாதிப்பை அடையும். முகத்தை ஒருசில வழிகளை பின்பற்றி கவனமாக தூய்மைப்படுத்த வேண்டும். இல்லையேல் முகத்தில் பாதிப்பு ஏற்படும்

தற்போது முகம் கழுவும்போது நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள் குறித்தும், அந்த தவறுகளை திருத்துவது எப்படி என்றும் பார்ப்போம்

1. முதலில் கை கழுவினீர்களா? முகத்தை கையால் கழுவுவதற்கு முன்னர் முதலில் கையை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நாம் நம்முடைய கையை பலவித விஷயங்களுக்கு பயன்படுத்தி இருப்போம். அப்போது நமது உள்ளங்கையில் நம்மையும் அறியாமல் பல பாக்டீரியாக்கள் கலந்து இருக்கும். அதோடு நாம் முகத்தை கழுவினால் எந்தவித பயனும் இருக்காது. அதுமட்டுமின்றி கையில் உள்ள பாக்டீரியாக்கள், முகத்திலும் பரவி முகத்திற்கு நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முகம் கழுவுவதற்கு முன்பு கட்டாயம் கையை நன்றாக கழுவுங்கள்

2. மேக்கப்பை கலைக்காமல் முகம் கழுவலாமா? முகத்தை சுத்தப்படுத்துவதின் உண்மையான நோக்கமே முகத்தின் சருமம் புத்துணர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான். ஆனால் ஒருசிலர் முகத்திற்கு போட்ட மேக்கப்பை கலைக்காமல் முகத்தை கழுவுவார்கள். அவ்வாறு செய்வது தவறு. இதனால் அழுக்குகள் சரும துளைகளிலேயே தங்கி விடும்.

3. சுடுதண்ணீரில் முகம் கழுவலாமா? அதிகமான குளிர் இருக்கும் காலங்களில் மட்டும் சுடுதண்ணீரில் முகம் கழுவலாம். ஆனால் சாதாரணமான காலங்களில் பெரும்பாலும் சுடுதண்ணீரை முகத்தை தூய்மைப்படுத்த பயன்படுத்த வேண்டாம். முகத்தில் சிகப்பு புள்ளிகள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் அடிக்கடி முகத்தை சுடுதண்ணீரில் கழுவுவதுதான். மேலும் சுடுதண்ணீரில் முகம் கழுவினால் தோல் எரிச்சல் அடைவதுடன் அதிகப்படியான வறட்சியும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

4. முக க்ரீம் தேவையா? பளிச்சென முகத்திற்கு ஒருசிலர் அவ்வப்போது க்ரீம்களை பூசிக்கொள்வதை பார்த்திருக்கின்றோம். ஆனால் அடிக்கடி முக க்ரீம்களை பூசிக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ரெகுலராக பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேசமயம் இயற்கையாக கிடைக்கும் ஒருசில க்ரீம்களை பூசிக்கொள்ளலாம். தேனை அவ்வபோது க்ரீம் போல முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் நீண்ட காலத்திற்கு முகத்தின் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளலாம்

5. துண்டால் முகத்தை அழுத்தி துடைப்பது சரியா? முகத்தில் உள்ள அழுக்கு, கரை ஆகியவற்றை போக்குவதற்காக துண்டால் முகத்தை அழுத்தி துடைப்பது ஒரு தவறான வழிமுறை ஆகும். துண்டால் முகத்தை அழுத்தி துடைப்பதால் முகத்தில் சுருக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படலாம். மனித முகத்தின் சருமம் மிகவும் மென்மையானதூ. எனவே அதனை அழுத்தி துடைக்காமல் மென்மையாக துண்டால் தொட்டு தொட்டு சுத்தப்படுத்த வேண்டும். அதிலும் மென்மையான பருத்தி நூலால் ஆன துண்டையே பயன்படுத்த வேண்டும்

6. முகத்தில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கலாமா? கூடவே கூடாது. முகத்தில் எப்போதும் ஒருவித ஈரப்பதத்தோடு வைத்திருப்பது முக்கியம். ஈரப்பதத்திற்காக ஒருசில ஈரப்பத பொருட்களை முகத்தில் அவ்வப்போது தடவிக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக முகம் முற்றிலும் வறண்டு போகும் அளவிற்கு இருக்க விடக்கூடாது. இயற்கையான பொருட்களினால் முகத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்க பல பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி முகத்தின் ஈரப்பதம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள்

04 1486205435 3washing

Related posts

பெண்களின் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி?

nathan

ரெடிமேட் கொலாஜன் மாஸ்க்

nathan

சரும வறட்சியை போக்கும் பேஸ் மாஸ்க்

nathan

ஒரு வாரத்தில் ஒளிரும் தோலை பெறவது எப்படி – மற்றும் நாளுக்கு நாள் அதற்கான வழிமுறைகள

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களை கவர்ந்து இழுக்கும் அழகை பெற இவற்றை செய்தாலே போதும்..

nathan

ஸ்க்ரப் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகி ஆரோக்கியம் கிடைக்கிறது

nathan

முக சுருக்கத்தை போக்கும் சூப்பர் மாஸ்க்

nathan

முகப் பொலிவிற்கு

nathan