25.6 C
Chennai
Sunday, Dec 15, 2024
28 1448692030 3 lemon
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

வாரம் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்து, உடல் களைப்புடன், முகமும் பொலிவிழந்து இருக்கும். இப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை வார இறுதியில் சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து பொலிவாக்கலாம். பொதுவாக சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சரியான வழி.

அதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்யலாம். அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மிகவும் ஈஸியாக முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். மேலும் ப்ளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்துக் காணப்படும். கட்டாயம் ஒவ்வொருவருக்கும் வெள்ளையாக ஆசை இருக்கும். எனவே சமையலறைப் பொருட்களைக் கொண்டு ப்ளீச்சிங் செய்து வாருங்கள்.

அதுமட்டுமின்றி, இயற்கைப் பொருட்கள் அனைத்து வகையான சருமத்திற்கும் பொருந்தும். சரி, இப்போது முகத்தின் பொலிவை அதிகரிக்க உதவும் அந்த சமையலறைப் பொருட்கள் என்னவென்று படித்து பின்பற்றி வாருங்கள்.

தக்காளி

தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகளை உடனே நீக்கலாம்.

தயிர்

தயிரில் உள்ள நொதிகள் மற்றும் லாக்டிக் அமிலம், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும். அதற்கு தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் ஒரு மாற்றத்தைக் காண்பீர்கள்.

எலுமிச்சை

தக்காளியைப் போன்றே எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அந்த எலுமிச்சையின் சாற்றினை படுக்கச் செல்லும் முன், நீருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

பப்பாளி

பப்பாளியை அரைத்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

28 1448692030 3 lemon

Related posts

த்ரெட்டிங் செய்த பின் கவனிக்க வேண்டியவை

nathan

கரும்புள்ளியை விரைவில் மறையச் செய்யும் 5 தேயிலை மர எண்ணெய் குறிப்புகள் !!

nathan

உங்கள் சருமத்திற்கு பொலிவு தரும் 3 சிறந்த மண் வகை மாஸ்க்குகள்

nathan

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் !

sangika

ஆபத்தாகலாம்!! மஞ்சளை பெண்கள் அதிகளவில் எடுத்துக்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா?

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ் (beauty tips in Tamil)

nathan