மோர் கலோரி சத்தில் குறைந்த அளவு கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. பல கிருமிகளின் பாதிப்பினை குடலிலிருந்து நீக்குகின்றது. சளி, ஐலதோஷம், இவற்றினை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுவது.
நெஞ்செறிச்சலை நீக்கும் கனமான உணவு எடுத்துக்கொண்டால் மோர் குடித்தால் வயிறு தொந்தரவு நீங்கும். கோடையில் உடல் சூட்டினை தவிர்க்க மோர் வெகுவாய் உதவுகின்றது. இது ஒருவரின் எடை குறைப்பிற்கு வெகுவாய் உதவும். சிறிதளவு மோரினை தலையில் தடவி 20 நிமிடங்கள் பொறுத்து தலைமுடியினை நன்கு அலசுங்கள். பளபள வென்ற மென்மையான தலைமுடி உங்களுக்கே. இதே போன்று உடலில் மோர் பூசி 15நிமிடம் கழித்து குளிக்க சருமம் மென்மையாகும். மோர் தடவி குளிப்பது வெயிலில் வாடிய கறுத்த சருமத்தினை புத்துணர்ச்சி பெறச்செய்யும்.
Related posts
Click to comment