25.7 C
Chennai
Sunday, Dec 29, 2024
PCLoElV
ஃபேஷன்

மிதமான வெளிச்சம்… கண்ணுக்கு குளிர்ச்சி… வீட்டுக்கு அழகு திரை சீலைகள்

வீட்டை அழகுபடுத்த பலவித நவீன முறைகள் வந்தாலும், ஜன்னல் திரைகள் பல காலம் தொட்டே அந்த இடத்தை பிடித்து வருபவகை ஆகும். இன்று நவீன கலகட்டத்துக்கு ஏற்றார்போல பல வித வகைகளில் திரைசீலைகள் கிடைக்கின்றன.திரைச்சீலைகள் வீட்டுக்குள் மிதமான வெளிச்சத்தை கொண்டு வருபவை. மேலும் வீட்டுக்குள் தூசி புகாத வண்ணம் காப்பவை. ஆனால் இதை எல்லாவற்றையும் மீறி ஜன்னல் திரைகள் வீட்டுக்கு அழகு சேர்ப்பவையாகவும் இருக்கின்றன. ஜன்னல் இல்லாத வீடுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுபோல திரைச்சீலைகள் இல்லாத ஜன்னல்கள் வீட்டுக்கு அழகல்ல.

திரைச்சீலைகளை அமைத்துத் தர இப்போது பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. வீட்டிற்குத் தகுந்தாற்போல் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் வந்து வீட்டைப் பார்த்து திரைச்சீலைகளை அமைத்துத் தருவார்கள். அவர்கள் எந்த வண்ணத்தில் வீட்டுத் திரைச்சீலை அமைக்கலாம் என்பதற்கு ஆலோசனைகளும் தருவார்கள்.வீட்டுக்கு, ஜன்னல்களுக்குத் திரைகள் இடத் தீர்மானித்து விட்டால் உடனடியாகக் கிடைக்கின்ற திரைகளை வாங்கி மாட்டிவிடக் கூடாது. முதலில் என்ன நிறத்தில் திரை சீலைகள் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் அறைக்கு என்ன வண்ணத்தில் பெயின்ட் அடித்திருக்கிறீர்களோ அந்த வண்ணத்திற்கு ஏற்றார்போல் திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக நீல வண்ணம் என்றால் அதற்குத் ஏற்ப அடர் நீல வண்ணத்தில் திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கலாம்.சிலருக்கு நேரெதிர் வண்ணம் பிடிக்கும். சுவரின் வண்ணம் மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் சோபா போன்ற அறைக்கலன்கள் அடிப்படையிலும் திரைச்சீலையின் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அடர் நிறங்களைவிட மெல்லிய வெளிர் நிறங்களே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

திரைச்சீலைகள் தேர்வில் இப்போது பல விதமான வகைகள் வந்துவிட்டன. தேர்ந்தெடுக்கும் பொருள்களில் இருந்து இதைப் பலவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். துணியில், பிளாஸ்டிக் பொருளில், மர நார்களில், மூங்கில் கம்புகளில் எனப் பலவிதமான திரைச் சீலைகளைச் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. படுக்கையறைக்கு ஒரு விதமான திரைச் சீலையைத் தேர்ந்தெடுத்தால் வரவேற்பறைக்கு வேறு விதமான திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கலாம். மரப் பொருளான திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டுக்கு ஒரு கம்பீரத் தோற்றம் கிடைக்கும்.

இப்போது திரைச்சீலைகளில் இப்போது பிடித்த ஓவியங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவை வீட்டுக்கு ஒரு கலையம்சத்தைத் தரும். இல்லையெனில் பூக்கள் படம் கொண்ட திரைச்சீலைகளை மாட்டும்போது ஒரு இதமான மனநிலையை அளிக்கக் கூடும். சிலருக்கு இதுவும் விருப்பமில்லை எனும்போது வெறுமனே ஒரே வண்ணத்தில் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

அதே சமயத்தில் ஒரே விதமான திரைச்சீலைகள் மட்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. திரைச்சீலைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். ஒரு மாதம் பிளாஸ்டிக்கால் ஆன திரைச்சீலை என்றால் அடுத்த மாதம் துணியால் வேறு வண்ண திரைச்சீலையைப் பயன்படுத்தலாம்.திரைச்சீலைகள் வீட்டைத் தூசிகளில் இருந்து காப்பவை. ஆதலால் வெளியிலிருந்து வரும் தூசிகள் திரைச்சீலையில் படிந்து இருக்கும். நாள் கணக்காக அதைச் சுத்தம் செய்யாமல் விடக்கூடாது. அதனால் வாரம் ஒரு முறையேனும் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும்.PCLoElV

Related posts

புதிய ஆடைகளை வாங்கி அப்படியே அணிபவரா? அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துமாம்..!

nathan

பெண்களுக்கு அழகு சேர்க்கும் தாவணி

nathan

ஆர்கானிக் ஆடைகள்

nathan

சேலையை விட்டுக் கொடுக்க மாட்டோம்!

nathan

நளினமாக புடவை கட்டுவது எப்படி?

nathan

புதிய ஆண்டுக்கு ஏற்ப புதுசா சொல்றோம்!

nathan

க்யூட் குட்டீஸ் கிறிஸ்துமஸ் கனவுகள்

nathan

உள்ளம் கொள்ளை போகும் – வைர நகைகள்

nathan

ரசாயன கலப்பின்றி உருவாகும் ஆர்கானிக் ஆடைகள்

nathan