24.1 C
Chennai
Sunday, Dec 15, 2024
IMG 1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால்……

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்..முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த, பின் கழுவ வேண்டும்.

IMG 1

சருமத்தில் ஏற்படும் அரிப்பு தேமல் போன்றவற்றிற்கு மஞ்சளுடன் வேப்பிலை கொழுந்து சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் சருமத்தில் உள்ள நோய்கள் குணமாகும்.

மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.

மஞ்சள் தூளில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

சருமம் சுருக்கங்களுடன் காணப்பட்டால், மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

Related posts

இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்

nathan

இதோ எளிய நிவாரணம்! சருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்க வேண்டுமா?

nathan

அடேங்கப்பா! தல தோனியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?

nathan

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

முகத்தை ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம் தயிரை கொண்டு .!

nathan

கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா?

nathan

இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்!…

sangika

காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க!….

sangika

சூப்பர் டிப்ஸ் கண் சுருக்கத்தை மிக விரைவில் போக்கக் கூடிய பொருட்கள் இவைதான் !!

nathan