நம் வீட்டிலேயே பயன்படுத்தப்படும் கருஞ்சீரகத்தை வைத்து எப்படி நம் உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- கருஞ்சீரகம்- 1 டீஸ்பூன்
- சீரகம்- 1 டீஸ்பூன்
- தேன்- 1 டீஸ்பூன்
- தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
- ஒரு சிறு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை விட்டு அதனை சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
- பின்பு கொதிக்கும் அந்த நீரில் 1 டீஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்,
- பின் கொதிக்க வைத்த அந்த நீரை வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேனை சேர்த்து தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு குடித்து வந்தால் உடல் எடையில் மாற்றம் ஏற்படும்.
- மேலும் இந்த நீரை புற்று நோய் உள்ளவர்கள் காலையும், மாலையும் இதனை பருகினால் புற்று நோயில் இருந்து விரைவாக குணமடையலாம்.
பயன்கள்
- கருஞ்சீரகத்தில் தைமோகியோனின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
- இதில் உடலுக்கு நன்மை தர கூடிய கொழுப்பு அதிகம் உள்ளதால் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றது.
- கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும் இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது.
- பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.