31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
201612220825237312 Things to look while driving car SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்கள் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வாகனத்தை ஓட்டுபவர் கவனம் சிதறாமல் ஓட்டி செல்வது மிக மிக முக்கியம். கார் ஓட்டுநர்கள் ஓட்டும்போது செய்யும் சில தவறுகளை தவிர்த்திட வேண்டும்.

பெண்கள் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
வாகனத்தை ஓட்டுபவர் அனைவரும் ஒரே சிந்தனையுடன், கவனம் சிதறாமல் ஓட்டி செல்வது என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் சாலையில் தற்போது கார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. புதியதாக கார் ஓட்டுபவர்கள் முதல் சிறப்பாக கார் ஓட்ட பழகியவர்வரை அனைவரும் சாலையில் வாகனத்தை ஓட்டும் சில பொதுவான தவறுகளை மேற்கொள்கின்றனர்.

இதன் மூலம் தேவையற்ற விபத்து, சாலையில் சண்டை, அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் என அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரிய விபத்து எனும்போது உயிரிழப்பு, உடல்நல பாதிப்பு போன்றவை ஏற்படும். எனவே கார் ஓட்டுநர்கள் ஓட்டும்போது செய்யும் சில தவறுகளை தவிர்த்திட வேண்டும்.

கவனத்தை திசை திருப்பாமல் ஸ்டியரிங் பிடியுங்கள் :

கார் ஓட்ட நாம் அமர்ந்து ஸ்டியரிங் என்பதை தெளிவான மனநிலையுடன் பிடித்திட வேண்டும். கார் ஸ்டியரிங் பிடித்து கொண்டே சாலைகளில் வேடிக்கை பார்ப்பது, மொபைல்போனை ஆராய்வது, மொபைல் போனில் பேசுவது, டேஷ்போர்டை பார்க்காமல் அதிவேகத்தில் ஓட்டுவது, படிப்பது, சாப்பிடுவது, ஏதேனும் பருகுவது என நம்மை திசை திருப்பும் எந்த பணியையும் செய்யக் கூடாது. இந்த பணிகள் உங்கள் பயணத்தை பாதுகாப்பற்றதாக ஆக்கிவிடும். உங்களை நம்பி அமர்ந்து வருபவரையும் யோசியுங்கள். எனவே கார் ஓட்டும்போது ஸ்டியரிங் வீல் தான், டேஷ்போர்டும், வின்ஷில்டும்தான் உங்கள் நண்பன் என நினைத்து அவர்களை கவனித்து ஓட்டிச்செல்லுங்கள்,

மயங்கிய மனநிலையில் கார் ஓட்டாதீர்கள் :

நாள் முழுவதும் பணி செய்து விட்டு அயர்ந்து உறங்கும் இரவு வேளையில் தூக்க மனநிலை மற்றும் அதிக பணியின் காரணமாய் பகல் வேளையில் ஒருவித மயக்கமான மனநிலையில் கார் ஓட்டாதீர்கள். நல்ல உற்சாகமான உடல் நிலையில்தான் சாலையின் போக்குக்கு ஏற்ப வாகனத்தை இயக்க முடியும், மேலும் அதிகமான மருந்து உட்கொண்டு (அ) மது அருந்தி விட்டு தயவு செய்து ஸ்டியரிங் பிடிக்காதீர்.

சீட் பெல்ட் அணிவது அவசியம் :

சீட் பெல்ட் அணியாமல் செல்வது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் மிக அபாயகரமான விபத்தில் 35 சதவீத டிரைவர்கள் அடிபட காரணமாய் அமைவது சீட் பெல்ட் அணியாமல் இருப்பதுதான். பெரும்பாலும் இளம் வயதினர்தான் சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுகின்றனர். காரில் செல்லும் பெரியவர்கள் சீட்பெல்ட் அணியும் பழக்கத்தை குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் அப்பொழுதுதான் இளவயதில் அவர்கள் சீட்பெல்ட் அணிவர் எனவே சீட் பெல்ட் அணிந்தே கார் ஓட்டுங்கள்.

சரியான திசையில் கண்ணாடி இருத்தல் :

சாலையில் வாகனம் ஓட்டும்போது பின்புறம் வரும் வாகனங்களை கவனித்து ஓட்டவேண்டும். அதற்கென உள்ள கண்ணாடியை சரியானப்படி சரியான திசையில் வைத்திட வேண்டும். அதற்கேற்ப நாம் சைகைகளை செய்து வாகனத்தை சிறப்பாக ஓட்டமுடியும்.

சாலைவிதிகளை மதிக்க வேண்டும் :

சாலையில் கார் ஓட்டும்போது ஒரப்பகுதியில் உள்ள சாலை குறிப்பு பலகையை கவனித்து ஓட்ட வேண்டும். வேகத்தடை உள்ள இடத்தில் வேகமாய் ஓட்டுவது, ஹாரன் ஒலி எழுப்பகூடாது என்ற இடத்தில் ஒலி எழுப்புவது என பல குறிப்பு பலகை விதிகளை மீறி செயல்படுவது கூடாது, அவசரம் என நாம் செய்யும் தவரை பின் வருபவரும் செய்வார். இதனால் விபத்துகள் ஏற்படும். எனவே கார் ஓட்டுபவர் இந்த தவறுகளை செய்யாமல் கார் ஓட்டுங்கள். 201612220825237312 Things to look while driving car SECVPF

Related posts

பெண்களின் சிறுநீர்க்கசிவுக்கு மருத்துவம்

nathan

சத்தமில்லாம டர்ர்ர்… விட்டு ரொம்ப நாறுதா? அதைத் தடுக்க சில டிப்ஸ்…

nathan

பெண்களை மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள்

nathan

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள் ?

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா?

nathan

பல் எந்த விதத்தில் நாம் பராமரிக்காததால் நம்முடைய உள்ளுறுப்புகளை பாதிக்கும்….

sangika

சூப்பர் டிப்ஸ்! தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா?

nathan

மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா? அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு…

nathan