வேரிகோஸ் வெயின் (Varicose Venis) என்பதனை உரையாடல் வழக்கத்தில் நரம்பு முடிச்சு என்றும் சுருள் சிரை நரம்பு என்றும் குறிப்பிடுகின்றனர். பெண்களுக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
பெண்களுக்கு ஏற்படும் நரம்பு முடிச்சு பிரச்சனை
கர்ப்பம், மாதவிடாய் நிற்றல், ஹார்மோன் மாறுபாடுகள், கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை கூட வேரிகோஸ் வெயின் பாதிப்பினை ஏற்படுத்தும்.
* கர்ப்பம் – கர்ப்ப காலத்தில் கால்களிலிருந்து இடுப்பிற்கு வரும் ரத்தத்தின் வேகம், அளவு குறையும் வாய்ப்பு அதிகமாவதால் கால்களில் வீங்கிய ரத்த குழாய்கள் இருக்கும். ஹார்மோன் மாறுபாடுகளும் காரணமாக இருக்கலாம். பேறு காலத்திற்குப் பிறகு 12 மாதங்களில் சகஜ நிலை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
* வெகு நேரம் நிற்கும் பணியாளர்கள் இந்த பாதிப்பிற்கு எளிதில் ஆளாகின்றனர்.
இந்த பாதிப்போடு புண் ஏற்படலாம், ரத்த கட்டிகள் உருவாகலாம். அதிக ரத்த கசிவும் ஏற்படலாம்.
மருத்துவர் இதனை பார்த்தே பாதிப்பினை அறிவார். அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகள் வால்வு பாதிப்பு போன்ற மேலும் பல தகவல்களை அறிய உதவுகின்றன.
சிகிச்சை:
முதலில் மருத்துவர் அன்றாட வாழ்க்கை முறையில் சில அறிவுறுத்தல்களை அளிப்பார்.
* நீண்ட நேரம் நிற்பதனை தவிர்க்க வேண்டும்.
* எடையினை குறைத்தல் அவசியம்.
* ரத்த ஓட்டம் சீராக இருக்கும் படியான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
* கால்களை படுக்கும் பொழுதும், உட்காரும் பொழுதும் உயர தூக்கி வைத்தல் அவசியம்.
* அழுத்தம் தரும் ஸாக்ஸ், உறைகள் அறிவுறுத்தப்படும். இவை பலன் அளிக்காத போது லேசர், அறுவை சிகிச்சை என அவசியத்திற்கேற்ப சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுவில் நீண்ட நேரம் உட்காருவது, நீண்ட நேரம் நிற்பது இவற்றினை தவிர்ப்பதும், வேலை எதுவும் செய்யாது ‘மெத்தென’ இருப்பதனை தவிர்ப்பதும் வருமுன் காப்போனாக இருக்கும்.
சில குறிப்பிட்ட வகை யோகா பயிற்சி முறைகள் ‘வேரிகோஸ் வெயின்’ பாதிப்பினை தவிர்ப்பதாகவும், பாதிப்பு ஏற்பட்டாலும் வலியின்றி இருக்க உதவுவதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.