பெண்களுக்கு தன்னம்பிக்கை தான் முதல் தேவை. நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது என்பதை பெண்கள் உணர வேண்டும்.
பிரச்சினைகளை கண்டு மனம் துவண்டு விடாமல், அதிலிருந்து வெளிவரும் வழியை பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் பெண்களை வலிமைப்படுத்தும்.
சிக்கலில் இருந்து விடுபடுவதன் மூலம் புதிய அனுபவத்தை பெறுவோம். அந்த அனுபவம் தான் நம்மை வழி நடத்தும். அதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்யும்.’
சமீபகாலமாக பெண்கள் விழிப்புணர்வு பற்றிய செய்திகளே, தொலைக்காட்சிகளில் பெருமளவு ஒளிபரப்பாகின்றன. அவை பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையானவை. பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை தீர்க்க சட்டத்தையும், காவல் துறையையும் நாட, அவர்களுக்கு விழிப்புணர்வு மிக அவசியம். அதில் சினிமாக்களின் பங்களிப்பும் அதிகமாக இருக்கிறது.’
ஒவ்வொரு வெற்றிபெற்ற பெண்ணுக்கு பின்னாலும், ஒரு பெரிய போராட்டம் இருக்கும். அந்தப் போராட்டத்தில் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள் கூட, அந்தப் பெண் வெற்றியடைந்ததும் அதில் தங்களுக்கு பங்கு இருப்பதுபோல் காட்டிக்கொள்ள போட்டிபோடுவார்கள்.
அரசாங்கம் முதலில் பெண்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
பெண் கல்வியுடன், தற்காப்பு கலையையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.’
‘பல இடங்களில் பெண்களுக்கு சுதந்திரமே இல்லை. ஆனால் சில இடங்களில் இருக்கும் சுதந்திரத்தையும் பெண்கள் வீணடித்து முகம் சுழிக்க வைத்துவிடுகின்றனர். ஆண்களுக்கு இணையானவர்கள் என்பதை சினிமா தியேட்டர், பூங்கா, கடற்கரை, பேருந்து போன்ற பொது இடங்களில் காட்டக்கூடாது.
குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள இயலாத விஷயங்கள் அனைத்துமே, வழங்கப்பட்ட சுதந்திரத்தை சிதைப்பதாகவே அமையும்.’
பெண்கள் ஒரு நபரின் தோற்றத்தை மட்டும் பார்க்காமல், அவருடைய சமூக பொறுப்பு, பெண்களை பற்றிய உயர்ந்த எண்ணம், சுயமரியாதை, கடமையுணர்வு போன்றவைகளை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, பொருத்தமானவரை திருமணம் செய்துகொண்டால் திருமணத்தின் பாதுகாப்பை உணரலாம்.