என்னென்ன தேவை?
வடித்த சாதம் – 2 கப்,
புளிச்ச கீரை (அலசி ஆய்ந்தது) – 1 கப்.
வறுத்துப் பொடிக்க…
காய்ந்தமிளகாய் – 4,
மிளகு, வெந்தயம், தனியா, சீரகம் தலா – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கு.
தாளிக்க…
கடுகு, உளுத்தம்பருப்பு தலா – 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் – சிறிது, க
றிவேப்பிலை – 1 டீஸ்பூன்.
புளிக்காய்ச்சல் செய்ய…
புளி, உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
புளிக் கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வைக்கவும். கடாயில் எண்ணெய் சிறிது விட்டு வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பொடியை புளிக்கரைசலில் போட்டு ஒரு கொதி விடவும். உதிரியாக வடித்த பச்சரிசி சாதத்தில் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து கொட்டவும். பின்னர் கீரையை வதக்கி கொட்டவும். புளிக்காய்ச்சல் போட்டு கிளறவும். அதன்மேல் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி கிளறி பரிமாறவும்.