1. பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி6, சி மற்றும் ஃபோலிக் ஆசிட் உள்ளன.
2. தினமும் பீட்ரூட் சாற்றைக் குடித்துவர, உயர் ரத்த அழுத்தம் குறையும்.
3. பீட்டாசியானின் (Betacyanin) எனும் நிறமி ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது.
4. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
5. இரும்புச்சத்து செறிந்து உள்ளதால் ரத்தசோகையைப் போக்கும்.
6. ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளதால், கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடலாம்.