31.2 C
Chennai
Saturday, Oct 19, 2024
1518181062 0781 1
மருத்துவ குறிப்பு

பார்வைத் திறனை பாதுகாக்க வழிகள்…!

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத் திறனை பாதுகாக்கலாம்.
7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு  நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.
தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும்.
உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண் சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண்  புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.
பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை  பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும்.
தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.

Related posts

மகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டியவை

nathan

கண்ணை மறைக்கும் மது போதை

nathan

உலகைப் பயமுறுத்தும் உயர் ரத்த அழுத்தம்

nathan

உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பை வருவதற்கு இவை தான் காரணம்

nathan

ஜாக்கிரதை! நுரை நுரையாக சிறுநீர் கழிக்கிறீர்களா?

nathan

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை

nathan

சிசேரியனுக்கு பிறகு சுகப்பிரசவம் நிஜமாவே சாத்தியமா? பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan