27.5 C
Chennai
Saturday, Sep 28, 2024
கை வேலைகள்பொதுவானகைவினை

பானை அலங்காரம்

image0044a

தேவையான பொருட்கள்:

  • பெரிய பானை
  • உப்புத்தாள்
  • எம்சீல்
  • fabric கலர்கள்
  • வார்னிஸ்
  • 3டி அவுட்லைனர்
  • பிரஷ்
  • பெவிக்கால்
செய்முறை:

  • பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும்.
  • பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • முதலில் கருப்பு கலரை பானை முழுவதும் அடிக்கவும். ஒரு மணிநேரம் காயவிடவும்.
  • எம்சீலில் இரண்டு கலரையும் நன்கு கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  • நடுவில் சிறு சிறு உருண்டைகளை வட்டமாக தட்டி தேவையான எடுத்தில் பசையை தடவி ஒட்டவும்.
  • அதை சுற்றி பூ இதழ்களை செய்து பசை தடவி ஒட்டவும்.
  • அனைத்து பூக்களுக்கும் கொடி போல் ஒல்லியாக உருட்டி இணைக்கவும்.
  • அனைத்தையும் நன்கு காயவைக்கவும்.
  • பூவின் நடுவில் மஞ்சள் கலரும், பூக்களுக்கு ரோஸ் கலரும், கொடிகளுக்கு பச்சை கலரை அடிக்கவும்.
  • பின்பு காயவைக்கவும்.

image0046h

  • காய்ந்த பின்பு மேலே பாதியளவு மஞ்சள் கலர் அடிக்கவும்.
  • எம்சீலை சிறு உருண்டைகளாக உருட்டி திராட்ச்சை கொத்து போல் பானையில் பசை தடவி ஒட்டவும்.
  • அதன் மேலே கொடி போல் செய்து பானை கழுத்து பகுதியில் ஒட்டவும்.
  • நன்கு காய்ந்த பின்பு திராட்ச்சைக்கு ஊதா நிறமும், கொடிக்கு பச்சை நிறம் அடிக்கவும்.
  • காயவிடவும்.

image0047d

  • கழுத்து பகுதியை சுற்றி 3டி அவுட்லைனர் கொண்டு வளைவு வளைவாக வரையவும். காயவிடவும்.

image0048u

  • நன்கு காய பின்பு வார்னிஸ் அடித்து நிழலில் 1நாள் முழுவதும் காயவிடவும்.
  • அழகான பூந்தொட்டி தயார்.


image0044a

 

Related posts

எப்படி காகித மயில் செய்ய-How To Make Paper Peacock

nathan

உடலில் மஹந்தி அலங்காரம்

nathan

இலகு மகந்தி டிசைன் போடுதல்

nathan

மெஹந்தி டிசைன்ஸ்

nathan

சுருள் படங்கள் செய்வோமா?

nathan

கேரட் கார்விங்

nathan

குட்டீஸ் சாண்டா செய்வோமா………….

nathan

சந்தோஷத்தை மீட்டுத் தந்த நகை தயாரிப்பு

nathan

மெஹந்தி பிரியரா நீங்கள்? அப்ப உடனே இத படிங்க…

sangika