1. வயிற்றுப் பூச்சிகள் ஒழிய:
பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்திவர வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
2.இரத்த சோகை மற்றும் அரிப்பு தீர:
வேப்பமரத்தின் இலைகளை அரைத்து சிறு உருண்டை சாப்பிட்டுவர இரத்தசோகை மற்றும் அரிப்பு நீங்கும்.
3. தலைவழுக்கை மாற:
ஐந்து கிராம் மிளகையும், ஐந்து கிராம் உப்பையும் எடுத்துக் கொண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து, நீ சேர்க்காமல் நன்றாக மொழுவென்று அரைத்துக்கிடைக்கும் விதையை இரவில் பனியில் வைத்து, காலையில் எடுத்து வழுக்கையுள்ள இடத்தில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு ஆறு மாதம் செய்து வர, வழுக்கை மறைந்து முடிவளர ஆரம்பிக்கும்.
4. வாய்ப்புண் நீங்க:
அகத்திக்கீரையை பச்சையாக மென்று தின்றாலே, வாய்புண், தொண்டை வலி நீங்கிவிடும்/
5. தாய்மார்களின் மசக்கைக்கு:
புதினாக் கீரையைக் கழுவி சுத்தம்செய்து புளி வைத்து திவையாலாகச் செய்து சாப்பிட்டு வர வாந்தி, மயக்கம் நிற்கும்.
6. முகப்பருவை போக்க:
சாதிக்காய், சந்தனம், மிளகு இம்மூன்றையும் மைய அரைத்து முகத்தில் தடவி வர உடனே குணமாகும்.
7. வயிற்றுப்போக்கு மாற:
வெற்றிலையுடன் சிறிது ஓமம் சேர்த்து மய அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடனே வயிற்ர்றுப்போக்கு நீங்கும்.
8. பல் ஆட்டம் நிற்க:
கடிக்காயைக் கஷாயம் செய்து தினசரி வாய் கொப்பளித்து வரவும்.