25.2 C
Chennai
Tuesday, Dec 17, 2024
chocolatefacepack 1657028873
முகப் பராமரிப்பு

பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா?

எல்லோரும் சாக்லேட் சாப்பிட விரும்புகிறார்கள். டார்க் சாக்லேட் உங்கள் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக உங்கள் இதயத்திற்கு சிறந்தது. ஆம், சாக்லேட்டுடன் கூடிய ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகள் போன்ற சரும பராமரிப்பு அழகை மேம்படுத்துகிறது.

 

சாக்லேட் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து உங்கள் சருமத்தை அழகாக்குகிறது. சாக்லேட் உங்கள் தோலில் உள்ள கறைகள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவும். உலக சாக்லேட் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நீங்கள் ஒரு சாக்லேட் பிரியர் மற்றும் உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்த விரும்பினால், கீழே சில எளிய சாக்லேட் ஃபேஸ் பேக்குகள் உள்ளன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் அழகை அதிகரிக்க அதைப் பயன்படுத்தவும்.

சாக்லேட் பவுடர் ஃபேஷியல்
இந்த சாக்லேட் பவுடர் ஃபேஷியல் சருமத்தின் ஈரப்பசையை மேம்படுத்துவதோடு, முதுமைக்கான அறிகுறிகள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. அதோடு இது சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த சாக்லேட் ஃபேஷியலை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

செய்முறை:

* ஒரு பௌலில் 2 ஸ்பூன் சாக்லேட் பவுடரை எடுத்து, அதில் 3 ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

எப்பவும் உங்க மூஞ்சில எண்ணெய் வடியுதா? அப்ப இந்த ஃபேஸ் வாஷை யூஸ் பண்ணுனா முகம் ஜொலிக்க தொடங்குமாம்! எப்பவும் உங்க மூஞ்சில எண்ணெய் வடியுதா? அப்ப இந்த ஃபேஸ் வாஷை யூஸ் பண்ணுனா முகம் ஜொலிக்க தொடங்குமாம்!

சாக்லேட் ஃபேஸ் ஸ்கரப்

இந்த சாக்லேட் ஃபேஸ் ஸ்கரப் சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். இதனால் இந்த ஃபேஸ் ஸ்கரப்பை அடிக்கடி பயன்படுத்துவதால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

செய்முறை:

* ஒரு பௌலில் 2 ஸ்பூன் கொக்கோ பவுடர், 1 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை மற்றும் சிறிது பால் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை ஈரத்துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும்.

* பின்னர் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அழுத்தி தேய்த்துவிடாமல், மென்மையாக தேய்க்க வேண்டும்.

* 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

தேனை உங்க உதடுகளில் இப்படி பயன்படுத்தினால் உங்க உதடு அழகா கவர்ச்சியா மாறுமாம்…ட்ரை பண்ணி பாருங்க! தேனை உங்க உதடுகளில் இப்படி பயன்படுத்தினால் உங்க உதடு அழகா கவர்ச்சியா மாறுமாம்…ட்ரை பண்ணி பாருங்க!

கடலை மாவு, சாக்லேட் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்கிறது. இது கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த ஃபேஸ் பேக்கை போட்ட சில நிமிடங்களிலேயே முகம் பிரகாசமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.

செய்முறை:

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் சாக்லேட் பவுடர், 1/2 ஸ்பூன் காபி பவுடர் மற்றும் 1 ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை நன்கு கழுவி விட்டு, முகத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு தயாரித்து வைத்துள்ள ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கரும்புள்ளியை நீக்கி உங்க சருமத்தை பளபளப்பாக ஒளிரச் செய்ய கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க போதும்!கரும்புள்ளியை நீக்கி உங்க சருமத்தை பளபளப்பாக ஒளிரச் செய்ய கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க போதும்!

பாதாம் சாக்லேட் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் பொலிவையும், அழகையும் மேம்படுத்த சிறந்தது. முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை சட்டென்று அதிகரிக்கும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டால், நல்ல பலனைக் காணலாம்.

செய்முறை:

* ஒரு பௌலில் கொக்கோ பவுடரை சிறிது எடுத்து, அதில் பாதாம் விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை நன்கு கழுவி துணியால் துடைத்து, தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

Related posts

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika

தக்காளியால் அழகா…

nathan

சூப்பர் டிப்ஸ்..முகத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கான கை வைத்தியங்கள்..

nathan

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

nathan

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

nathan

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் இத செய்யுங்கள்!…

nathan

சூப்பர் டிப்ஸ்! வெறும் உப்பு தண்ணிய வெச்சு இந்த தழும்புகளை எப்படி சரிசெய்யலாம்?

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்

nathan

பெண்களின் கன்னங்கள் பளிச்சிட அழகு குறிப்புகள்

nathan