26.6 C
Chennai
Sunday, Dec 29, 2024
05 1483594084 8
தலைமுடி சிகிச்சை

பளபளப்பான நீண்ட கூந்தலை பெற இந்த விதையை உபயோகித்திருக்கிறீர்களா? உபயோகமான ரெசிபி!!

சியா விதைப் பூச்சு நம்முடைய தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றது.அடர்த்தியான, பளபளப்பான மற்றும் நீண்ட தலைமுடி பற்றிய உங்களுடைய கனவு நனவாக வேண்டுமெனில் இந்த சியா விதைகளை உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.

சியா விதைகளில் சோயா பீன்ஸ்களை விட 20 சதவீதம் அதிக புரதம் உள்ளது. உங்களுடைய கேசம் 70 சதவீதம் கெராட்டீன் என்கிற புரதத்தினால் உருவானது. இந்த கெராட்டீன் உங்களுக்கு நீண்ட, அழகிய மற்றும் பளபளப்பான கூந்தலைத் தருகின்றது.

சியா விதைகளில் உள்ள அதிக அளவிலான புரதம் உங்களுடைய சேதமடைந்த முடியை சீர்படுத்தி புதிய மயிர்க்கால்களின் மீளுருவாக்கத்திற்கு உதவுகின்றது.

இப்போது நீங்கள் இங்கே சியா விதைப் பூச்சை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் இதன் மூலம் உங்களுடைய உச்சந்தலை மற்றும் தலைமுடியை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்

செய்முறை ஒரு கிண்ணத்தில் சுமார் இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை எடுத்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பத்து நிமிடங்களில் சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி உப்பத் தொடங்கும். அப்பொழுது தண்ணீரை வடித்து விடுங்கள். இப்பொழுது உங்களுக்கு ஒரு ஜெல் போன்ற பதத்தில் சியா விதைகள் கிடைக்கும்.

செய்முறை தேங்காயை அரைத்து அதனுடைய பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய இந்தப் பூச்சிற்கு அரை கப் தேங்காய் பால் தேவைப்படும். தேங்காய் பாலில் நிறைவுறா கொழுப்பு உள்ளது. இது உங்களுடைய சேதமடைந்த கூந்தலை சீர் செய்ய உதவும். மேலும் இது உச்சந் தலைக்கு பாதுகாப்பளிக்கின்றது. மேலும் இது பளபளப்பான கூந்தலை உங்களுக்கு தரும்.

தேங்காய் பாலுடன் ஒரு தேக்கரண்டி எழுமிச்சை சாறு சேருங்கள். அதனுடன் ஜெல் பதத்தில் உள்ள சியா விதைகளை சேருங்கள். இந்தக் கலவை நன்கு கலக்கவும். எழுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் உங்களுடைய உச்சந் தலையை சுத்தப்படுத்தி, பொடுகை போக்கி எண்ணெய் வழிவதை தடுக்கின்றது.

இந்தக் கலவையின் நெடியை உங்களால் நுகர முடியவில்லை எனில், வாசனைக்காக சில் துளிகள் லாவண்டர் எண்ணெயை சேருங்கள். உங்களுக்கு தேவையான அளவு மற்றும் பதத்திற்கு வரும் வரை எண்ணெயை சேர்த்து அதன் பின்னர் கலவையை நன்கு கலக்குங்கள்.

தலை முடியை நன்கு சீவி அதில் உள்ள சிக்கல்களை நீக்குங்கள். தலையை வாரும் முன்னர் ஒரு சில துளிகள் தேங்காய் எண்ணெயை உங்களுடைய தலைமுடியில் தடவுங்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய முடிக்கு வளவளப்பை தரும் மற்றும் சிக்கல்களை எளிதாக நீக்க உதவும்.

உங்களுடைய தலை முடியை சிறிய பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள் அதன் பின்னர் ஒரு தூரிகையை பயன்படுத்தி சியா விதை கலவையை உங்களுடைய தலைமுடியில் தடவுங்கள். கலவையை தடவும் பொழுது முடியின் வேரிலிருந்து நுனி வரை மிகவும் கவனமாக தடவுங்கள். மிகவும் கவனமாக உங்களுடைய தலைமுடி முழுவதும் பரவும் படி இந்தக் கலவையை தடவும். அதிகமாகத் தடவினால் கலவை உங்களுடைய முகத்தில் வழிந்து விடும். எனவே நீங்கள் மிகவும் கவனமக இருக்க வேண்டும்.

ஒது துண்டை எடுத்து கொதிநீரில் முக்கி எடுங்கள். அதை நன்கு பிழிந்து அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றவும். இப்பொழுது இந்த துண்டை உங்களுடைய தலை முடியைச் சுற்றி கட்டவும். இவ்வாறு செய்வதன் மூலம் துண்டில் இருந்து வெளிவரும் நீராவி, தலைமுடியில் உள்ள சியா விதை பூச்சு உங்களுடைய தலைமுடியில் நன்கு ஆழமாக ஊடுறவ உதவும்.

இந்த பூச்சை சுமார் 10 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். அதன் பின்னர் உங்களுடைய தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு நன்கு அலசி எடுங்கள். கண்டிஷனர் உபயோகிப்பதை தவிர்க்க முயலுங்கள். இந்த சியா விதை பூச்சு உங்களின் கேசத்திற்கு கண்டிஷனராக செயல்பட்டு, பளபளப்பான கூந்தலை தரும். எனவே அதிகப்படியான கண்டிஷனர் உங்களுடைய கூந்தலை பாழாக்கி விடும்.

குளித்து முடித்த பின்னர் உங்களுடைய கேசத்தில் இருந்து அதிகப்படியான தண்ணீரை துவட்டி எடுத்து விடுங்கள். தலையை துவட்ட மிகவும் மெல்லிய பருத்தி துண்டை பயன்படுத்துங்கள். தலை துவட்டும் பொழுது உச்சந் தலையை கடுமையாக தேய்க்காதீர்கள். அதிகப்படியான ஈரம் உங்களுடைய தலைமுடியை கண்டிப்பாக பாதிக்கும்.

05 1483594084 8

Related posts

உங்களுக்கு அதிக நரை முடி இருக்கிறதா? இந்த ஹேர் பேக்கை வாரம் இருமுறை தடவினால் போதும்

nathan

உங்க சமையலறையில் உள்ள ‘இந்த’ பொருட்கள் முடி உதிர்வை தடுத்து வேகமாக வளர வைக்க உதவுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்க தலையில இந்த மாதிரி இருக்கா?அப்ப இத படிங்க!

nathan

ஆண்களே, முடி உதிர்வை முற்றிலுமாக தடுக்கும் வெந்தய- ஆலிவ் எண்ணெய்…! முயன்று பாருங்கள்

nathan

உங்க தலைமுடி பலவீனமா இருக்கா? அப்ப இத முயன்று பாருங்கள்…

nathan

பொடுகு தொல்லைக்கு முடிவு கட்டும் தேங்காய் எண்ணெய்

nathan

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!

nathan

ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள்

nathan

இயற்கை முறையில் சீயக்காய் தூள் வீட்டில் செய்வது எப்படி. முடி நன்கு நீண்டு வளரும்…

nathan