29.7 C
Chennai
Friday, Jul 18, 2025
qq6023 1
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு விபரீதமுடிவு!

nathan

“மன்னிப்பு கேட்க முடியாது -த்ரிஷாவைப் பற்றி நான் தவறாகப் பேசவில்லை; ”

nathan

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர்

nathan

வணங்கான் படத்தின் வெற்றி

nathan

சிறு வயதிலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் பாடி இருக்கிறேன் – ஏ ஆர் ரஹ்மான் மகள்

nathan

EXCLUSIVE PHOTOS: Salma Hayek Without Makeup Is as #Flawless as You’d Expect

nathan

விஜய் உடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்த பிக் பாஸ் ஜனனி..

nathan

உள்ளங்கால் அரிப்பு காரணம்

nathan

இந்தியாவின் மிகப்பெரிய சக்கரை ஆலைக்கு சொந்தக்காரி!

nathan